Cinema News
ரஜினிக்கே விபூதி அடிக்கப்பார்த்த லைக்கா!.. வேட்டையன் படத்தில் நடந்த அந்த சம்பவம்…
Vettaiyan: பொதுவாக சம்பள பாக்கி என்பது திரையுலகில் எப்போதும் இருக்கும் ஒரு விஷயம்தான். குறிப்பாக சில காட்சிகளில் மட்டும் நடிக்கும் நடிகர்களுக்கு அதிக அளவில் சம்பள பாக்கி இருக்கும். நடித்து முடித்து சில நாட்கள் கழித்தே தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்து செக் வரும். அதை வங்கியில் போட்டால் பணம் இல்லாமல் திரும்பிவிடும்.
இப்படி பணம் இல்லாமல் திரும்பிய பல காசோலைகள் பல நடிகர்களிடமும் இருக்கிறது. எனவே, பெரிய நடிகர்கள் சம்பள விஷயத்தில் உஷாராக இருப்பார்கள். ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கும் நடிகருக்கு அட்வான்ஸ் என ஒரு தொகையை கொடுப்பார்கள். படம் பாதி முடிந்ததும் ஒரு தொகையை கொடுப்பார்கள்.
இதையும் படிங்க: Karthi: அஜித்தை கழட்டிவிட்ட சிறுத்தை சிவா!… தம்பி நடிகருடன் கூட்டணி!… அந்த படத்தோட லைன் அப்-போ?!…
படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் மீதி தொகையை கொடுத்துவிடுவார்கள். அப்படி கொடுக்கவில்லை எனில் சம்பந்தப்பட்ட ஹீரோ டப்பிங் பேச வரமாட்டார். இது காலம் காலமாக நடக்கும் நடைமுறை. ஏனெனில், படம் வெளியாகி வெற்றி பெறாமல் போய்விட்டால் நஷ்ட கணக்கு காட்டி தயாரிப்பாளர் சம்பளம் கொடுக்க மாட்டார்.
எனவே, இந்த விஷயத்தில் நடிகர்கள் அலார்ட்டாக இருப்பார்கள். இந்நிலையில், வேட்டையன் படத்தில் சம்பள பாக்கி பிரச்சனையை சந்தித்திருக்கிறார் ரஜினி. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து அக்டோபர் 10ம் தேதி வெளியான திரைப்படம்தான் வேட்டையன்.
பொதுவாக ரஜினி அட்வான்ஸ் தொகையெல்லாம் அதிகமாக வாங்க மாட்டார். பல தயாரிப்பாளர்களிடம் வெறும் ஆயிரம் ரூபாயெல்லாம் அட்வான்ஸாக வாங்கிக்கொண்டு நடித்திருக்கிறார். வேட்டையன் படத்தில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. ரஜினிக்கு 40 கோடி சம்பள பாக்கி வைத்துவிட்டதாம் லைக்கா.
எனவே, அதை கொடுக்கவில்லை எனில் டப்பிங் பேச வரமாட்டேன் என சொல்லிவிட்டாராம் ரஜினி. அதன்பின் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் உள்ளே வந்து ‘அந்த தொகையை நாங்கள் கொடுக்கிறோம்’ என சொன்ன பிறகே ரஜினி டப்பிங் பேச போனாராம். அப்படி வெளியான வேட்டையன் படம் ஜெயிலர் போல மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Vidamuyarchi: விடாமுயற்சி பொங்கலுக்கு வருமா…? அதுவும் சந்தேகம்தானா..? அவரே காரணமா…?