வாலி எழுதிய பல்லவி!.. பந்தயத்தில் தோற்று எல்லாத்தையும் கொடுத்த எம்.எஸ்.வி.. அட அந்த பாட்டா?!..

திரையுலகை பொறுத்தவரை இசையமைப்பாளருக்கும், பாடலாசிரியர்களுக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி என்பது முக்கியமானது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், கவிஞர் கண்ணதாசனுக்கும் இடையே இருந்த நட்பும், கெமிஸ்ட்ரியும் அதன்பின் யாரிடமுமே இருந்ததில்லை என்றே சொல்லலாம்.

எம்.எஸ்.வியின் இசையில் வாலி உட்பட எண்ணற்ற பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதினாலும் அவரின் ஃபேவரைட் கண்ணதாசன்தான். அவர்களின் நெருக்கம் சினிமாவை தாண்டிய உறவாக இருந்தது. அதேநேரம், கண்ணதாசன் கோலோச்சிய போதே அவருக்கு போட்டியாக வந்தவர் வாலி.

இதையும் படிங்க: இடுப்புல இருக்க கொலுசுக்கே சொத்த எழுதலாம்!.. வாலிப பசங்களை இம்சை பண்ணும் காவ்யா…

வாலி சினிமாவில் பாடலாசியராக முயற்சி செய்து கொண்டிருந்தபோது கண்ணதாசன் பெரிய பாடலாசியராக இருந்தார். வாய்ப்பு தேடி 4 வருடங்கள் ஆன பின்னரும் கூட வாலி சில பாடல்களை மட்டுமே எழுதியிருந்தார். ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய் நண்பரின் மூலம் திருச்சியில் உள்ள ஒரு கம்பெனிக்கு வேலைக்கு போகலாம் என்றும் முடிவெடுத்தார்.

ஆனால், கண்ணதாசன் எழுதிய ‘மயக்கமா கலக்கமா’ பாடலை கேட்ட பின் அந்த முடிவை கைவிட்டு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி வெற்றியும் பெற்றார். கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே உரசல் வந்தபோது எம்.ஜி.ஆரின் படங்களுக்கு வாலியே தொடர்ந்து பாடல்களை எழுதினார்.

இதையும் படிங்க: பாடலில் தெறிக்கவிட்ட வாலி!.. கவிஞருக்கு எம்.ஜி.ஆர் செய்த மிகப்பெரிய மரியாதை!..

ஒருமுறை எம்.எஸ்.வியின் இசையில் ஒரு பாடலை எழுதப்போனார் வாலி. நீங்கள் சிறப்பான ஒரு பல்லவியை எழுதிவிட்டால் என் கையில் இருக்கும் வாட்ச், கழுத்தில் போட்டிருக்கும் செயின் மற்றும் மோதிரம் ஆகியவற்றை உங்களுக்கு கொடுத்துவிடுகிறேன்’ என எம்.எஸ்.வி சொல்ல, டியூனை கேட்டு பல்லவியை எழுதினார் வாலி.

வரிகளை படித்துப்பார்த்த வாலி சொன்ன மாதிரியே வாட்ச், மோதிரம் மற்றும் செயினை கழட்டி அவரிடம் கொடுத்தார். அதை மகிழ்ச்சியுடன் வாங்கி வாலி ‘அண்ணே எனக்கு இதெல்லாம் வேண்டாம். உங்கள் அன்பே போதும்’ என சொல்லி திருப்பி கொடுத்துவிட்டார். அப்படி எம்.எஸ்.வியை அசத்திய வரிகள்தான் ‘காற்று வாங்கப் போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்.. அதை கேட்டு வாங்கி போனாள்.. அந்த கன்னி என்னவானாள்’. ரிக்‌ஷாக்காரன் படத்திற்காக வாலி எழுதிய பாடல் இது.

 

Related Articles

Next Story