காமாலை காரணமாக அவர் இறந்தார் என அவருடைய குடும்பத்தினர் சொன்னாலும் அடிப்படையில் குடிப்பழக்கத்திற்கு ஆளானவர் என்று சில செய்திகளும் உலாவின. இந்த நிலையில் அவருடைய மருத்துவ சிகிச்சைகளைப் பற்றியும் அந்த சமயத்தில் அவர் அடைந்த துன்பங்களை பற்றியும் பிரபல பத்திரிக்கையாளரான நக்கீரன் கோபால் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பொதுவாக நக்கீரன் கோபால் திரை துறையைச் சார்ந்த பல பேரின் மருத்துவ உதவிகள் சம்பந்தமாக அவரால் முடிந்த அளவு உதவி இருக்கிறாராம். விஜய் டிவி புகழ் கோவை குணா, ரோபோ சங்கர் ஆகியோரை ஒரு சமயத்தில் காப்பாற்றியவரும் நக்கீரன் கோபால் தானாம். இந்த நிலையில் முத்துக்குமார் மரணப்படுக்கையில் இருந்த போதும் அவருக்கு உதவி செய்தவரும் நக்கீரன் கோபால்.
ஒரு சமயம் முத்துக்குமாரின் மனைவி நக்கீரன் கோபாலுக்கு தொலைபேசி வாயிலாக அழைத்து ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் அதற்கு 78 லட்சம் தேவைப்படுவதாகவும் சொல்லி இருக்கிறார். உடனே முத்துக்குமாரிடம் தொடர்பு கொண்டு பேசிய நக்கீரன் கோபால் என்ன செய்யப் போகிறாய் என கேட்டாராம் .அதற்கு முத்துக்குமார் தன்னுடைய மனைவியின் நகை 6 லட்சத்திற்கு இருப்பதாகவும் அக்கவுண்டில் 8 லட்சம் இருப்பதாகவும் தன்னுடைய அலுவலகம் ஒரு 25 லட்சத்திற்கு போகும் எனவும் கூறி இருக்கிறார்.
அதற்கு முன் முன்பணத்தொகையாக அந்த பெரிய மருத்துவமனைக்கு 40 லட்சம் கட்டியிருந்தாராம் முத்துக்குமார். உடனே நக்கீரன் கோபால் அவருக்கு தெரிந்த ஆயுர்வேத மருத்துவர் தர்மலிங்கம் என்பவரிடம்தான் நிறைய பேரை அழைத்துக் கொண்டு சிகிச்சை கொடுப்பாராம் .அதேபோல தான் முத்துக்குமாரையும் இந்த ஆயுர்வேத மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு வர வேண்டும் என எண்ணி இருக்கிறார்.
இதையும் படிங்க : தமிழ் தெரியாதுன்னு என்ன தூக்கிட்டாங்க!.. ஆனா அந்த ஹீரோ?!.. அவமானப்பட்ட விஜயகாந்த்…
அவர் எண்ணியதைப் போலவே முத்துக்குமாரையும் இந்த ஆயுர்வேத மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு போயிருக்கிறார். கிட்டத்தட்ட 15 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த முத்துக்குமாரின் உடல்நிலை சீராக இருந்ததாம். அதன் பிறகு ஒரு நான்கு படங்கள் தொடர்ச்சியாக முத்துக்குமாரை தேடி வர ஓய்வில்லாமல் அந்த நான்கு படங்களுக்கும் பாடலை எழுதினாராம்.
அதன் காரணமாகவே அவருக்கு மூச்சு விட முடியாமல் மிகவும் சிரமப்பட உடனடியாக நக்கீரன் கோபால், அவருடைய குடும்பத்தினர் ஒரு ஆம்புலன்சை எடுத்துக் கொண்டு மீண்டும் இந்த ஆயுர்வேத மருத்துவரிடம் கொண்டு செல்லலாம் என நினைக்க ஏதோ சில காரணங்களால் குறிப்பிட்ட நேரத்தில் அந்த இடத்தை அடைய முடியாமல் போய்விட்டதாம். அதனாலேயே போகும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக நக்கீரன் கோபால் அந்த பேட்டியில் கூறினார். இது மட்டும் இல்லாமல் நடிகர் ரோபோ சங்கரை மரணப் படுக்கையில் இருந்து காப்பாற்றியவரும் இந்த நக்கீரன் கோபால்தான் என்று சொல்கிறார்கள்.
இதையும் படிங்க : இந்த வயசுல லவ் , டூயட் எல்லாம் தேவையா? மறைமுகமாக ரஜினியை தாக்கிய தனுஷ்?
இயக்குனர் அட்லீ…
Vijay antony:…
தமிழ் சினிமாவில்…
ரஹ்மான் மற்றும்…
நடிகர் சிம்பு…