அது மட்டும் போதாது.! இதுலயும் பங்கு வேணும்.! கெளதம் மேனன் உங்ககிட்டையுமா.?
முன்பெல்லாம் ஒரு பாட்டெழுத பாடலாசிரியரை தேடுவார்கள் இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும். அப்படி கவிதை நடையில் பாடலாசிரியர்கள் எழுதிய பாடல்கள் காலம் கடந்தும் ரசிகர்களால் பாராட்டப்படுகின்றன.
ஆனால், தற்போது பாட்டை பலர் எழுதுகின்றனர். முன்னணி ஹீரோ, இயக்குனர்கள் என எழுத தொடங்கிவிட்டனர். சில நேரங்களில் அது ஒர்க் அவுட் ஆனாலும், பல நேரங்களில் அது விளம்பரத்திற்காக மட்டுமே பயன்படுகிறது. ஆதலால், பாடலாசிரியர்கள் தற்போது முன்பை போல வெளியில் தென்படுவதில்லை. அவர்களுக்கு போதிய வருமானமும் கிடைப்பதில்லை என்றே கூறவேண்டும்.
இதையும் படியுங்களேன் - இந்த தடவ அஜித் வேண்டாம்.! வினோத் எடுத்த விபரீத முடிவு.!
பெண் பாடலாசிரியர் தாமரை எழுதிய பல பாடல்கள் நம் செவிகளுக்கு இன்னும் விருந்தளித்து வருகின்றன. கெளதம் மேனன் படத்தில் தாமரை தான் பாடல்களை முக்கால்வாசி எழுதிவிடுவார். தாமரை எழுதிய பாடல்கள் இணையத்தில் அதிலும் யு டியூபில் அதிக பார்வையாளர்களை பெற்றுவிடும். அதன் மூலமும் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
இதனை பார்த்த தாமரை, தற்போது புதிய யுக்தியை கையாண்டுள்ளார். அதாவது, இனி சம்பளம் மட்டும் போதாதாம். யு -டியூப்பில் வரும் பணத்தில் பங்கு வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு சம்மதித்தால் பாடல் எழுதுகிறேன் என கூறி வருகிறாராம். இது அனைவரது படத்திற்குமா? கெளதம் மேனன் சார் உங்கள் படத்திற்கும் சேர்த்துதானா என ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றனர்.