More
Categories: Cinema History latest news

தக்க சமயத்தில் உதவியவருக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் கொடுத்த எம்.ஜி.ஆர்!. ஒரு ஆச்சர்ய தகவல்..

நடிகராக வாழ்க்கையை துவங்கி, அரசியலில் கால்வைத்து வீழ்த்த முடியாத தலைவராக வாழ்ந்து மறைந்தவர் எம்.ஜி.ஆர். அடிமைத்தனத்தை வேரறுக்கும் கதைகளை மையமாக வைத்து படங்களின் கதைகளை தேர்வுசெய்து நடித்து வந்தும் இருந்திருக்கிறார்.

தனது வாழ்நாளின் துவக்கத்தில் மிகுந்த வறுமையில்  அனுபவித்த எம்.ஜி.ஆர் திரையில் அசைக்க முடியாத ஒரு மாபெரும் சக்தியாக மாறினார். தனிப்பட்ட வாழ்விலும், சினிமா வாழ்விலும் பல சறுக்கல்களை சந்தித்திருந்தாலும் தனக்கென ஒரு தனி பாணியை தேர்வு செய்து அதில் பயணித்து வெற்றி மேல் வெற்றியை குவித்தார்.

Advertising
Advertising

தியேட்டர் உரிமையாளரான எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ‘மாயவரம்’ குருநாத செட்டியார் தனது திரையரங்கில் எம்.ஜி.ஆர் படங்களை மட்டுமே திரையிடுவது என்ற கொள்கையோடு வாழ்ந்து வந்தவர். இதர நடிகரின் படங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை காட்டிலும் எம்.ஜி.ஆருக்கே அங்கு முன்னுரிமை. எம்.ஜி.ஆர் மீது அந்த அளவு அன்பும், பக்தியும் கொண்டிருந்தவர் குருநாத செட்டியார்.

தனி மனிதனாக தனது முதல் தேர்தலை சந்தித்த எம்.ஜி.ஆர். அப்பொழுது செலவுக்கு பணமில்லாமல் பரிதவித்து வந்திருக்கிறார். திடீரென குருநாத செட்டியார் நினைவுக்கு வர அவரிடம் சென்று ஐந்து லட்சம் ரூபாயை கேட்டிருந்தாராம். வாரி வழங்கிய வள்ளல் தன்னிடம் வந்து கேட்டுவிட்டாரே என நெகிழ்ந்து எதையும் பற்றி யோசிக்காமல் அவர் கேட்ட தொகையை கொடுத்து அனுப்பியிருக்கிறார்.

mgr

அந்த தொகை செலவழிந்து போக கூடுதலாக இரண்டு லட்சம் ரூபாய் தேவை என எம்.ஜி.ஆர் கேட்டுமிருக்கிறார். அதனையும் உடனடியாக வழங்கியிருக்கிறார் குருநாத செட்டியார். செல்லும் இடங்களிலெல்லாம் வெற்றி செல்வராக வலம் வந்த எம்.ஜி.ஆருக்கு அரசியல் களமும் மகுடம் சூட்டியது. பதவி ஏற்ற பின் திரையரங்கு உரிமையாளரின் இல்லம் தேடி சந்திக்கிறார் அவர்.

தனக்கு உதவியாக வழங்கப்பட்ட ஏழு லட்ச ரூபாயோடு சென்றவர், அதனை கொடுத்துமிருக்கிறார். அதை பெற மறுத்த குருநாதரோ ‘இது நான் மூட்டை தூக்கி சம்பாதித பணம் அல்ல. உங்கள் படத்தை எனது தியேட்டரில் திரையிட்டு அதன் மூலம் வந்த லாபம் தான் இது உங்களுக்கே சொந்தமானது’ என பெருந்தன்மையோடு சொல்லியும் இருக்கிறார்.

ஆனால் செய்நன்றி மறவாத எம்.ஜி.ஆரோ தனது சொந்த படங்களான “அடிமைப்பெண்”, “உலகம் சுற்றும் வாலிபன்”, “நாடோடி மன்னன்” அகியவற்றை வாழ் நாள் முழுவதும் திரையிடும் உரிமையை கைமாறாக வழங்கினார் . வாரி வழங்கும் வள்ளல் என மக்கள் அவரை போற்றுவது பொய்யல்ல என்பதனை நிரூபிக்கும் விதமாகவே இது அமைந்ததாகவே பார்க்கப்படுகிறது.

 

Published by
Sankar

Recent Posts