Connect with us
M. N. Nambiar

Cinema History

எம்.என்.நம்பியார் பற்றிய நம்பமுடியாத அறிய உண்மைகள்..!

வில்லன் நடிகராக திகழ்ந்த எம்.என் நம்பியார் தென்னிந்திய திரையுலகில் மிகச் சிறந்த நடிகராக இருந்ததோடு மட்டுமல்லாமல் மனிதநேயம் மிக்க நபராகவும் திகழ்ந்திருக்கிறார்.

திரையில் மட்டும் தான் இவர் வில்லனாக நடித்திருக்கிறாரே ஒழிய இவரது நிஜ வாழ்வில் ஒரு சிறு குழந்தையைப் போலத்தான் இருந்திருக்கிறார் மேலும் இவர் தனது உணவில் அசைவத்தை சேர்த்துக் கொண்டது இல்லை.

மேலும் அனைவரும் விரும்பி பருகக் கூடிய காபி டீ குளிர்பானங்கள் போன்றவற்றை அறவே தவிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

M. N. Nambiar

M. N. Nambiar

உடற்பயிற்சி செய்ய அதிகளவு ஆர்வத்தோடு இருந்த இவர் தனது சென்னை வீட்டில் ஒரு உடற்பயிற்சி கூடத்தை இதற்காக நிறுவி தினமும் உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக வைத்திருந்தார். மேலும் இவர் வீட்டில் இருந்த பேட்மிட்டன் மைதானத்தில் சிவாஜி கணேசன் மற்றும் பல நடிகர்கள் இணைந்து இவரோடு பேட்மிட்டன் விளையாடி இருக்கிறார்கள்.

இவர் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் மேலும் இவர் பிறந்து வளர்ந்த நீலகிரி மலைக்கும் செல்லுவார். அதுமட்டுமல்லாமல் இவரோடு இணைந்து நடித்த நடிகர்கள் அனைவரையும் சபரிமலைக்கு மாலை அணிந்து கன்னி சாமியாக்கி அழைத்துச் சென்றிருக்கிறார்.

இதனாலேயே இவருக்கு நம்பியார் சாமி, குருசாமி என்ற பெயர் நண்பர்கள் மத்தியில் பரவலாக வழக்கில் இருந்தது. இவர் கல்யாணி, கவிதா, வேலைக்காரி, கஞ்சன் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்ற விபரம் பலருக்கும் தெரியாது.

இவரின் திருமணம் எம்ஜிஆர் அவர்களின் தலைமையில் நடந்தது. அது மட்டுமல்லாமல் நம்பியாரின் மனைவி ருக்மணி அம்மாவின் சமையலை எம்ஜிஆர் அடிக்கடி சுவைத்திருக்கிறார்.

M. N. Nambiar

M. N. Nambiar

திரையில் பல லட்சங்கள் சம்பாதித்து இருந்தாலும் இவரை எங்கு தொடங்கி அழைத்து வந்த நாடக கம்பெனி ஒன்றை நம்பியார் நாடக மன்றம் என்ற பெயரில் நடத்தி வந்தார்.

மேலும் எந்த நாடக கம்பெனியில் கல்யாண சூப்பர் மார்க்கெட் கவியின் கனவு போன்ற நாடகங்களை அரங்கேற்றி இருக்கிறார். திகம்பர சாமியார் என்ற படத்தில் இவர் 11 வேடங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

வில்லனாக திரையில் தோன்றியிருந்தாலும் வாழ்க்கையில் மிக நல்லவராக இருந்த விஷயங்களை உணர்ந்து இன்றைய தலைமுறை இதுபோல நடந்தால் நல்லது.

google news
Continue Reading

More in Cinema History

To Top