ஒரே நேரத்தில் பத்து படங்களுக்கு ஒப்பந்தமான நடிகை… யார்ன்னு தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க!
1959 ஆம் ஆண்டு இயக்குனர் சி.வி.ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “கல்யாண பரிசு”. இதில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி, விஜயகுமாரி ஆகியோர் நடித்திருந்தனர். இதில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்த தங்கவேலுவை யாராலும் மறந்திருக்க முடியாது.
வேலை இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும் தங்கவேலு, தனது மனைவியிடம் தான் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி அவரை ஏமாற்றுவார். அவர் இடம்பெற்ற காட்சிகள் அனைத்தும் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். இதில் தங்கவேலுவுக்கு மனைவியாக நடித்தவர் எம்.சரோஜா. இவர் நிஜ வாழ்விலும் தங்கவேலுவை மணந்துகொண்டார். இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளனர்.
எம்.சரோஜா முதன்முதலில் அறிமுகமான திரைப்படம் “சர்வாதிகாரி”. இத்திரைப்படம் 1951 ஆம் ஆண்டு வெளியானது. இதில் எம்.ஜி.ஆர் கதாநாயகராக நடித்திருந்தார். இதில் கற்பகம் என்ற கதாப்பாத்திரத்தில் எம்.சரோஜா நடித்திருந்தார். இந்த நிலையில் எம்.சரோஜா குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
அதாவது “சர்வாதிகாரி” திரைப்படத்தில் எம்.சரோஜா வசனம் பேசிய விதம் அத்திரைப்படத்தை தயாரித்த மார்டர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தாருக்கு மிகவும் பிடித்துப்போனதாம். ஆதலால் அப்போதே எம்.சரோஜாவை கிட்டத்தட்ட பத்து திரைப்படங்களுக்கு ஒப்பந்தம் செய்தனராம் மார்டர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம். தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் பத்து திரைப்படங்களில் ஒப்பந்தமான ஒரே நடிகை எம்.சரோஜாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
1959 ஆம் ஆண்டு கே.ஏ.தங்கவேலுவை திருமணம் செய்துகொண்ட எம்.சரோஜா, அவருடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார். ஆனால் கே.ஏ.தங்கவேலுவின் இறப்பிற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்துக்கொண்டாராம் சரோஜா.
இதையும் படிங்க: இந்தியாவின் முதல் 3D திரைப்படம் உருவானது இப்படித்தான்… வேற லெவல் பண்ணிருக்காங்களே!!