வேறு எந்த நடிகையும் செய்யாத சாதனை!.. திரையுலகில் கலக்கிய எம்.சரோஜா..

m saroja
1951 ஆம் ஆண்டு டி.ஆர்.சுந்தரம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ”சர்வாதிகாரி”. இதில் எம்.ஜி.ஆருடன் இணைந்து ”எம்.சரோஜா” நடித்திருந்தார். தனது முதல் படத்திலேயே எம்.ஜி.ஆருடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற எம்.சரோஜா அடுத்தடுத்து பல வெற்றி திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெற்றார். குறிப்பாக ”கல்யாணப்பரிசு”,”அறிவாளி”,”வணங்காமுடி”,”மருதநாட்டுவீரன்”,”அன்னக்கிளி” போன்றவை இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் ஆகும்.

thangavelu with m saroja
இவர் திரைத்துறையில் ஆற்றிய சாதனைகளை இன்றளவும் எந்த நடிகையாலும் நெருங்கூட முடியாத அளவிற்க்கு உள்ளது. ”சர்வாதிகாரி” திரைப்படத்தை தயாரித்த ”மாடர்ன் தியேட்டர்ஸ்” நிறுவனம் அப்படத்தில் எம்.சரோஜா பேசி நடிக்கும் வசனத்தை கண்டு வியந்து அவருக்கு தொடர்ந்து பத்து படங்களில் நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஒரே நேரத்தில் ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து 10 படங்களில் நடித்த ஒரே நடிகை என்று பெருமை கூறியவர் ”எம்.சரோஜா”. இதுவரை வேறு எந்த நடிகைக்கும் நிகழ்ந்திராத ஒரு நிகழ்வாகும்.
அன்றைய காலகட்டத்தில் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து பிரபலமானவர் ”தங்கவேலு”. இவர் நடித்த ”தில்லானா மோகனாம்பாள்” இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. தொடர்ந்து அவருடன் பல படங்களில் நடித்தார் எம்.சரோஜா. இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இணைந்து நடித்து கலக்கிய திரைப்படம் ”கல்யாணப்பரிசு”. பின்னர் அவரது கணவர் இறந்த பிறகு அப்படியே தான் திரைப்படங்களில் நடிக்கும் பழக்கத்தை நிறுத்திக் கொண்டார்.

thangavelu with m saroja
”என்னுடைய கணவர் எனக்கு விட்டுட்டு போன சொத்து என்றால் நடிப்புதான். அந்த நடிப்பை விற்று நான் பணம் சம்பாதிக்க விரும்பவில்லை எவ்வளவோ பெரிய கம்பெனிகள் மற்றும் சின்ன கம்பெனிகள் நடிக்க அழைப்பு விடுத்தாலும் என் மனம் திரைப்படங்களில் நடிக்க அனுமதிப்பதில்லை” என்று பத்திரிக்கை பேட்டியில் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.