மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி போன ம.க.பா.ஆனந்த்....! நடந்தது என்ன...?
விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராக விளங்கி வருபவர் ம.க.பா.ஆனந்த். கிட்டத்தட்ட 11 வருடங்களாகவே விஜய் டிவியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் ரேடியோ ஜாக்கியாக இருந்த ம.க.பா சில பல காரணங்களால் அந்த வேலையை உதறி தள்ளி விட்டு விஜய் டிவிக்குள் நுழைந்தார். வந்ததில் இருந்து இன்று வரை ரசிகர்களின் அபிமான தொகுப்பாளராக விளங்கி வருகிறார்.
இவரின் நகைச்சுவை கலந்த பேச்சு அனைவரையும் வெகுவாக ஈர்த்து விடும். சமீபகாலமாகவே விஜய் டிவியில் புது தொகுப்பாளர்களின் வரவால் இவருக்கும் சரி சக ஆங்கர் பிரியங்காவுக்கும் சரி ஒன்று இரண்டு நிகழ்ச்சிகள் தான் கிடைப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் ம.க.பா ரசிகர்களை பாட்காஸ்ட்டில் தொடர்பு கொண்டு உற்சாகப்படுத்தி வருகிறாராம். அதாவது ரேடியோ மாதிரியான இந்த பாட்காஸ்டும் ரசிகர்களுக்கு தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்வதாக அமைந்துள்ளது. ஸ்பாட்டிஃபை என்ற ஆப்பை பதவிறக்கம் செய்து மை டியர் ம.க.பா என்பதை பார்த்தால் ம.க.பாவின் தொடர்கள் அனைத்தும் இருக்குமாம்.அதில் ரசிகர்களுக்கு தேவையான சந்தேகங்கள் மற்றும் இதர கேள்விகள் என எதுவானாலும் கேட்கலாம் என்று கூறினார்.