ஆளும் வர்க்கத்திற்கு பெரும் அடியா? எப்படி இருக்கு மாமன்னன்!.. டிவிட்டர் விமர்சனம்...

கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் பெரும் அலையை கிளப்பி வரும் திரைப்படம் மாமன்னன். உதயநிதி நடிக்கும் இந்த திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் நடிகர் உதயநிதிக்கு இதுதான் கடைசி படம் என கூறப்படுகிறது. மாரி செல்வராஜ் திரைப்படம் என்றாலே சமூக நீதி தொடர்பான கருத்துக்களை பேசக்கூடியவை என்கிற கருத்து மக்கள் மத்தியில் பரவலாக உள்ளதால் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்சமயம் மாமன்னன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்திற்காக முதலமைச்சர் ஸ்டாலின், இயக்குனர் பா.ரஞ்சித், தனுஷ் போன்றோர் மாரி செல்வராஜிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். படத்தை குறித்து பலரும் டிவிட்டரில் விமர்சனம் அளித்து வருகின்றனர்.

maamannan twitter
அதில் ஒருவர் கூறும்போது “சமீப காலமாக தமிழ் சினிமாவில் வந்த திரைப்படங்களில் இது சிறப்பான திரைப்படம். ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக சக்திவாய்ந்த கதையை உருவாக்கியுள்ளார் மாரி செல்வராஜ். 25 வருடங்களுக்கு பிறகும் கூட பேசப்படும் திரைப்படமாக மாமன்னன் இருக்கும்” என கூறியுள்ளார்.

maamannan twitter
சிறப்பான திரைப்படம், ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்கள், ஆளும் வர்க்கத்திற்கு எதிராக எப்படி எழுச்சி கொள்கிறார்கள் என்பதை படம் அற்புதமாக பேசுகிறது. இந்த படத்தின் மூலமாக இயக்குனரின் குமுறும் மனநிலையை அறிய முடிகிறது என ஒருவர் கூறியுள்ளார்.

maamannan twitter
படத்தில் ஒரு நபரின் நடிப்பை மட்டும் அனைவரும் பாராட்டுகின்றனர். அது வேறு யாருமல்ல. ஃபகத் ஃபாசில்தான் என ஒருவர் கூறியுள்ளார்.

maamannan twitter
தரமான திரைப்படம், ஆழமாக கதையை கூறியுள்ளனர். பல காட்சிகளில் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். வடிவேலு தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படத்தில் வரும் கருப்பு வெள்ளை காட்சிகள் மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தன. என ஒருவர் கூறியுள்ளார்.

maamannan twitter

maamannan twitter