Cinema News
ஐயம் பேக்!… சிம்பு படங்களிலேயே அதிக வசூல்.. மாநாடு செய்த சாதனை….
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து கடந்த மாதம் 25ம் தேதி வெளியான திரைப்படம் மாநாடு. தமிழில் முதன் முதலாக ஒரு லூப் டைம் திரில்லராக இப்படம் வெளியாகி வெற்றியும் பெற்றுள்ளது. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். சிம்புவும், எஸ்.ஜே சூர்யாவும் போட்டி போட்டு இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படம் இதுவரை வெளிவந்த சிம்பு படங்களை விட அதிக வசூலை ஈட்டியுள்ளது. இப்படம் ரூ.30 கோடியே 40 லட்சம் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் சம்பளம் மட்டும் 20 கோடியை தொட்டுள்ளது. எனவே, 10 கோடியில் இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
நவம்பர் 25ம் தேதி இப்படத்தை வெளியிடும் போது ரூ.5 கோடி நஷ்டத்தில்தான் இருந்தார் சுரேஷ் காமாட்சி. ஏனெனில் இப்படத்தில் தொலைக்காட்சி உரிமை அப்போது விற்கப்படவில்லை. ரூ.8 கோடிக்கு வாங்கி கொள்வதாக கூறியிருந்த விஜய் டிவி கடைசி நேரத்தில் ரூ.4 கோடிக்கு கேட்டதால் இப்படம் வெளியாவதிலேயே சிக்கல் ஏற்பட்டது. ஆனால், படம் வெளியாகி ஹிட் என கேள்விப்பட்டவுடன் ரூ.8 கோடி கொடுத்து வாங்கியது விஜய் டிவி.
மாநாடு படம் வெளியாகி 2 நாட்களில் ரூ.14 கோடி வசூல் செய்தது. இதுவரை மொத்தம் ரூ. 47 கோடியை இப்படம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் ரூ.60 கோடியை வசூல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு, வட மாநிலங்களில் ஹிந்தி டப்பிங்கில் நேரிடையாக சுரேஷ் காமாட்சியே ரிலீஸ் செய்துள்ளார். அதோடு, இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பல கோடிக்கு கேட்டு வருகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் போது இப்படம் தயாரிப்பாளருக்கு பல கோடிகளை லாபமாக கொடுக்கும் என உறுதியாக நம்பப்படுகிறது.
சிம்பு நடித்த படங்களில் இதுவரை எந்த படமும் இவ்வளவு வசூல் ஆனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.