வசூலில் சக்கை போடு போட்ட மாநாடு! - எத்தனை கோடி தெரியுமா?....

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து கடந்த மாதம் 25ம் தேதி வெளியான திரைப்படம் மாநாடு. தமிழில் முதன் முதலாக ஒரு லூப் டைம் திரில்லராக இப்படம் வெளியாகி வெற்றியும் பெற்றுள்ளது. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். சிம்புவும், எஸ்.ஜே சூர்யாவும் போட்டி போட்டு இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் இதுவரை வெளிவந்த சிம்பு படங்களை விட அதிக வசூலை ஈட்டியுள்ளது. இப்படம் ரூ.30 கோடியே 40 லட்சம் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. மாநாடு படம் வெளியாகி 3 நாட்களில் ரூ.24 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. இப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்ததால் ரிப்பீட் ஆடியன்ஸை இப்படம் பெற்றது.
இந்நிலையில், இப்படம் வெளியாகி 3 வாரங்களில் இப்படம் சுமார் ரூ.53 கோடியை வசூல் செய்துள்ளதாக மாநாடு திரைப்படத்தின் வினியோகம் செய்த RockFort நிறுவனத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். 3 வாரங்களை கடந்தும் இப்படத்தை காண ரசிகர்கள் தியேட்டர்களை நோக்கி வருவதால் இன்னும் சில கோடிகளை இப்படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு, வட மாநிலங்களில் ஹிந்தி டப்பிங்கில் நேரிடையாக சுரேஷ் காமாட்சியே ரிலீஸ் செய்துள்ளார். அதோடு, இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பல கோடிக்கு கேட்டு வருகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் போது இப்படம் தயாரிப்பாளருக்கு பல கோடிகளை லாபமாக கொடுக்கும் என உறுதியாக நம்பப்பட்டது.