சிம்புவின் மாநாடு.. முதல் நாள் எத்தனை கோடி வசூல் தெரியுமா?....

by சிவா |
simbu
X

சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிபார்த்த மாநாடு திரைப்படம் ஒருவழியாக நேற்று காலை வெளியானது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். முதன் முறையாக தமிழில் ஒரு டைம் லூப் திரைப்படம். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார். அவருக்கும், சிம்புவுக்கும் இடையான காட்சிகள்தான் படத்தில் அதிகம்.

இப்படத்தின் முதல் காட்சி வெளியான முதலே இப்படம் சிறப்பாக இருப்பதாக சிம்பு ரசிகர்களுடம், யுடியுப், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் சினிமாவை விமர்சனம் செய்யும் நபர்களும் பதிவிட்டனர். ஒருபக்கம் முதல் பாதி சரியில்லை. டைம் லூப் கான்செப்ட் பலருக்கும் புரியவில்லை. முதல் பாதியில் ஏற்கனவே வந்த காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது என கூறப்பட்டது.

மேலும், ஏ செண்ட்டர் என அழைக்கப்படும் சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே மாநாடு படம் வசூலை பெற்றது. பி மற்றும் சி செண்டர்கள் பெரிதாக வசூல் இல்லை என்றெல்லாம் கூறப்பட்டது.

இந்நிலையில், இப்படம் முதல் நாளில் 6.37 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாத்த திரைப்படம் முதல்நாளில் ரூ.10 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Next Story