அட சிம்புவே இத எதிர்பார்க்கலயாம்!..100 கோடி கிளப்பில் மாநாடு....

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து கடந்த மாதம் 25ம் தேதி வெளியான திரைப்படம் மாநாடு. தமிழில் முதன் முதலாக ஒரு லூப் டைம் திரில்லராக வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். சிம்புவும், எஸ்.ஜே சூர்யாவும் போட்டி போட்டு இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் இதுவரை வெளிவந்த சிம்பு படங்களை விட அதிக வசூலை ஈட்டியுள்ளது. இப்படம் ரூ.30 கோடியே 40 லட்சம் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் சம்பளம் மட்டும் 20 கோடியை தொட்டுள்ளது. எனவே, 10 கோடியில் இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

simbu

இப்படம் வெளியாகி நாளையோடு 25 நாட்கள் முடிகிறது. இன்னமும் இப்படம் தமிழகத்தில் 175 தியேட்டர்களில் ஓடி வருகிறது. இப்படத்தை வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர்களுக்கும், திரையிட்ட தியேட்டர் அதிபர்களுக்கும் இப்படம் நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. இதுவரை இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.58 கோடியை வசூல் செய்துள்ளது. உலக அளவில் இப்படம் ரூ.97 கோடி வசூலை நெருங்கிவிட்டது. எனவே, விரைவில் இப்படம் ரூ.100 கோடி கிளப்பில் இணையவுள்ளது.

சிம்பு நடித்த எந்த படமும் இதுவரை ரூ.100 கோடி வசூலை தொட்டதில்லை. மாநாடு திரைப்படம் அந்த சாதனையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story