இந்திய சினிமாவில் எந்த படமும் செய்யாத சாதனை.. அடிச்சு தூக்கிய மாநாடு......

by சிவா |
maanaadu
X

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து நவம்பர்25ம் தேதி வெளியான திரைப்படம் மாநாடு. தமிழில் முதன் முதலாக ஒரு லூப் டைம் திரில்லராக இப்படம் வெளியாகி வெற்றியும் பெற்றது.

படம் வெளியாகி 3 வாரத்தில் இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்து 100 கோடி கிளப்பில் இணைந்ததாக செய்திகள் வெளியானது. சிம்பு ரசிகர்களும் இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். அதோடு, இப்படத்தில் வெற்றி விழாவையும் படக்குழு சமீபத்தில் கொண்டாடியது.

இந்நிலையில், மாநாடு திரைப்படம் இந்திய சினிமாவில் எந்த திரைப்படமும் செய்யாத சாதனையை நிகழ்த்தியுள்ளது. இப்படத்தின் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளின் ரீமேக் உரிமை இதுவரை விலை போகாத அளவுக்கு விலை போயுள்ளதாம். இந்தியில் சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான் என பெரிய நடிகர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் நடித்த படங்களின் ரீமேக் உரிமை விட மாநாடு படத்தின் உரிமை அதிக விலைக்கு போயுள்ளது குறிப்பிடத்தக்கது. அது எவ்வளவு தொகை என்பது விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story