மாநாடு படம் நாளை ரிலீஸ் இல்லையாம்!.. சிம்பு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர்...

by சிவா |
simbu
X

simbu

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இப்படம் சிம்பு ரசிகர்களிடம் மட்டுமில்லாமல் திரையுலகிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் ஆங்கில பட பாணியில் டைம் லூப் எனும் விஷயத்தை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை (நவம்பர் 25ம் தேதி) தியேட்டர்களில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. எனவே, இப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவும் 2 நாட்களுக்கு முன்பே துவங்கியது. இதில், பல தியேட்டர்களிலும் 2 நாளைக்கும் இப்படம் புக்கிங் முடிந்துவிட்டதால் தியேட்டர்கள் அதிபர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இது வினியோகஸ்தர்கள் மற்றும் இப்படத்தின் தமிழக உரிமையை வாங்கியவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

simbu

இந்நிலையில், சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியும், ஏமாற்றமும் தரும் வகையில் இப்படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயவாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது மீண்டும் ரிலீஸ் தள்ளி சென்றுள்ளது சிம்பு ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story