அடிச்சு தூக்கிய சிம்பு... அட்வான்ஸ் புக்கிங்கில் மாஸ் காட்டிய மாநாடு!...

simbu
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இப்படம் சிம்பு ரசிகர்களிடம் மட்டுமில்லாமல் திரையுலகிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் ஆங்கில பட பாணியில் டைம் லூப் எனும் விஷயத்தை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோக்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற 25ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இன்று முதலே இப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவு துவங்கியது. இதில், பல தியேட்டர்களிலும் 2 நாளைக்கும் இப்படம் புக்கிங் முடிந்துவிட்டதால் தியேட்டர்கள் அதிபர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இது வினியோகஸ்தர்கள் மற்றும் இப்படத்தின் தமிழக உரிமையை வாங்கியவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாம். இதில் சிலர் வெங்கட்பிரபுவுக்கே போன் போட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனராம்.
அவர்களி கணக்குப்படி இப்படம் முதல் நாளே ரூ.10 கோடி வரை வசூல் செய்யும் எனவும் 4 நாட்களில் இப்படம் ரூ.30 கோடியை வசூல் செய்து விடும் எனவும் கணித்துள்ளனராம். மேலும், மங்காத்தா படத்திற்கு பின் வெங்கட்பிரபுவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், மகிழ்ச்சியில் உள்ளது மாநாடு படக்குழு..