வெற்றியை கொடுத்த எல்லோருக்கும் நன்றி... மாநாடு டீம் வெளியிட்ட வீடியோ...
சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிபார்த்த மாநாடு திரைப்படம் கடந்த 25ம் தேதி வெளியானது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். முதன் முறையாக தமிழில் ஒரு டைம் லூப் திரைப்படம். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார். அவருக்கும், சிம்புவுக்கும் இடையான காட்சிகள்தான் படத்தில் அதிகம். இப்படத்திற்கு பெரிய பலவே எஸ்.ஜே. சூர்யாதான் எனக்கூறப்படுகிறது.
இப்படம் சிறப்பாக இருப்பதாக சிம்பு ரசிகர்களுடம், யுடியுப், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் சினிமாவை விமர்சனம் செய்யும் நபர்களும் பதிவிட்டனர். ஒருபக்கம் முதல் பாதி சரியில்லை. டைம் லூப் கான்செப்ட் பலருக்கும் புரியவில்லை.
முதல் பாதியில் ஏற்கனவே வந்த காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது என கூறப்பட்டது. மேலும், ஏ சென்ட்டர் என அழைக்கப்படும் சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே மாநாடு படம் வசூலை பெற்றது. பி மற்றும் சி செண்டர்கள் பெரிதாக வசூல் இல்லை என்றெல்லாம் கூறப்பட்டது.
ஆனால், இப்படம் முதல் நாளில் ரூ.8.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. இப்படம் தொடர்பான பஞ்சாயத்தால் முதல் நாள் அதிகாலை 5 மணி சிறப்பு காட்சி திரையிடப்படவில்லை. ஒருவேளை அந்த காட்சி திரையிட்டிருந்தால் இப்படம் முதல் நாளே ரூ.10 கோடி வசூல் செய்திருக்கும் எனக் கூறப்படுகிறது.
2 நாட்களில் இப்படம் ரூ.14 கோடி வசூல் செய்துள்ளதாகவும், 3 நாட்களில் மொத்தமாக இப்படம் ரூ. 22 கோடி வசூல் செய்ததாக இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமட்சியே தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தற்போது 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இப்படம் ரூ.25 கோடியை தாண்டி இருக்கும் என நம்பப்படுகிறது. எனவே, இது ஒரு வெற்றிப்படமாக மாறியுள்ளது.
இந்நிலையில், படத்தை வெற்றிபெறச்செய்த ரசிகர்களுக்கு நன்றி கூறி மாநாடு படக்குழு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. இதில், வெங்கட் பிரபு, சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி,எஸ்.ஜே சூர்யா, ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் இடம் பெற்றுள்ளனர்.