ஓடிடியில் வெளியாகும் மாநாடு! - எப்போது தெரியுமா?..
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 25ம் தேதி வெளியான திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான் இப்படம் ஒரு லூப் டைம் திரில்லராக வெளியானது. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றுள்ளது. இப்படம் பல கோடிகளையும் வசூல் செய்து சிம்புவின் மார்க்கெட்டை உறுதி செய்துள்ளது.
இப்படத்தின் ஓடிடி உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது. அதேபோல், தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சி பெற்றுள்ளது. பொதுவாக ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியாகி 4 வாரம் கழித்தே ஒடிடியில் வெளியாக வேண்டும் என தியேட்டர் அதிபர்கள் விதிமுறை வகுத்துள்ளனர். அதன்படி இப்படம் டிசம்பர் மாதம் இறுதியில் சோனி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மாநாடு படத்தை பொங்கலுக்கு ஒளிபரப்ப கலைஞர் டிவி நிறுவனம் திட்டமிட்டது. ஆனால், ஓடிடியில் வெளியாகி 75 நாட்கள் கழித்தே தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும் என சோனி நிறுவனம் செக் வைத்துவிட்டது. இதன் காரணமாகத்தான் கடைசி நேரத்தில் விஜய் டிவி இந்த பேரத்திலிருந்து விலகி மாநாடு பட ரிலீஸுக்கு சிக்கல் ஏற்பட்டது.
எனவே, மாநாடு படம் பொங்கலுக்கு கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகாது என்பது குறிப்பிடத்தக்கது.