மாநாடு படம் கொரியன் படத்தின் காப்பியா? இதென்னடா சிம்புவுக்கு வந்த சோதனை

by adminram |   ( Updated:2021-10-16 04:22:47  )
maanadu
X

நடிகர் சிம்புவையும் சர்ச்சையையும் தனித்தனியாக பிரிக்கவே முடியாது போல எப்பவும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் தான் சிம்பு மீதான அனைத்து பிரச்னைகளையும் முடித்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது மீண்டும் புதிதாக ஒரு பிரச்சனை உருவாகி உள்ளது.

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தீபாவளியன்று வெளியாக உள்ளது. டைம் லூப் முறையில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. சிம்புவுக்கு இப்படம் ஒரு ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிதாக பிரச்சனை ஒன்று எழுந்துள்ளது.

a day

a day

அதாவது மாநாடு படத்தின் கதை கடந்த 2017ஆம் ஆண்டு Cho Sun Ho இயக்கத்தில் வெளியான A Day என்ற கொரியன் படத்தின் காப்பி என சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. இதுதவிர மாநாடு படத்தின் ட்ரைலரில் இடம்பெறும் காட்சிகளும் A Day படத்தின் காட்சிகளும் ஒத்துப்போவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், கொரிய படக்குழுவினர் மாநாடு தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளதால், பிரச்சனையை விரைவில் முடிவுக்கு கொண்டு வர ஆலோசனைகள் நடைபெற்று வருகிறதாம்.

சிம்புவுக்கு மட்டும் பிரச்சனைகள் எங்கிருந்து தான் வருமோ தெரியவில்லை. படம் வெளியாக போகும் சமயத்தில் இதுபோன்ற பிரச்சனை எழுந்துள்ளதால் படக்குழுவினர் அப்செட்டில் உள்ளார்களாம். ஆலோசனை முடிந்த பின்னரே படக்குழுவினர் என்ன முடிவு செய்துள்ளார்கள் என்பது தெரிய வரும்.

Next Story