சாலையில் இறந்து கிடந்த விஜயகாந்த் பட இயக்குனர்.. திரையுலகினர் அதிர்ச்சி….

Published on: December 8, 2021
vijayakanth
---Advertisement---

சினிமா துறை என்பது எல்லோரும் மகிழ்ச்சியை கொடுத்துவிடாது. சில இயக்குனர்கள் படாத பாடுபட்டு, பல வருடங்கள் போராடி ஒரு படத்தை இயக்குவார்கள். ஆனால், சில காரணங்களால் அப்படத்திற்கு பின் அவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காது. ஆனால், வேறு வேலைக்கு செல்லாமல் மீண்டும் மீண்டும் சினிமா எடுக்க முயற்சி செய்து கடைசியில் இறந்தே போவார்கள். தங்க இடமின்றி, உணவு இன்றி தங்களை வருத்திக்கொண்டு வாழ்க்கை வீணடித்து விடுவார்கள்.

vijayakanth

விஜயகாந்த் நடித்த மாநகர காவல் திரைப்படத்தை இயக்கியவர் தியாகராஜன். இப்படத்தை எவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் 1991ம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்திற்கு பின் பிரபு, சீதா நடித்த வெற்றி மேல் வெற்றி என்கிற படத்தை இயக்கினார்.

அதன்பின், மகள் மற்றும் மகனுடன் ஏவிஎம் காலணியில் வசித்து வந்தார்.  வாய்ப்புகள் இல்லாத தியாகராஜன் கடந்த 30 வருடங்களாக சென்னை சாலிகிராமம், வடபழனி ஆகிய பகுதிகளில் சுற்றி வந்தார். சில வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவரின் தலையில் பலத்த அடிபட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். ஆனாலும், போதிய பணம் இல்லாததால் அவரால் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியவில்லை.

thiyagaraja

இந்நிலையில்,சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோ நிறுவனத்தின் முன்பு இன்று இறந்து கிடந்தார். இவரின் உடலை போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

எந்த ஏவிஎம் ஸ்டுடியோ நிறுவனம் அவருக்கு பட வாய்ப்பு கொடுத்ததோ, அந்நிறுவனத்தின் முன்பே அவர் இறந்து கிடந்தது திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment