காதல் மன்னன் நாயகி முதல்வரின் மருமகளா? சர்ப்ரைஸ் தகவல்...என்னங்க இப்படி...
அஜித்திற்கு காதல் மன்னன் பெயரை வாங்கி கொடுத்த படத்தின் நாயகி மனு. ஒரே படத்தில் திலோத்தமா என ரசிகர்களால் அறியப்பட்டவர். இன்று எங்கு இருக்கிறார். யார் என்ற சர்ப்ரைஸ் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சரண் இயக்கத்தில் வெளியான படம் காதல் மன்னன். இப்படத்தில் அஜித்குமார் நடித்திருந்தார். முதலில் இப்படத்தின் நாயகியினை பல இடங்களில் தேடி இருக்கிறார்கள். ஆனால் சரியான முகம் கிடைக்கவில்லையாம். 'பத்மபூஷண்' தனஞ்ஜெயனோட நடன நிகழ்ச்சியில மானு நடனம் ஆடி இருக்கிறார். அதை பார்த்த விவேக் இப்படத்திற்கு நாயகி தேடல் நடப்பதாக கூறினாராம்.
சரணுக்கு இவரை பிடித்துவிட்டாலும் மானுவின் வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லையாம். 6 மாதமாக போராடி தான் அவர்களிடம் சம்மதம் வாங்கி இப்படத்தில் நடித்தாராம்.
இந்நிலையில், மானு அஸ்ஸாம், கவுஹாத்தியில பெரிய குடும்பத்தினை சேர்ந்தவராம். அவரின் தாத்தா கோபிநாத் பர்டலோய்தான் அஸ்ஸாமோட முதல் முதலமைச்சராம். மானு அசாம் முதல்வர் தருண் கோகோயோட மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது.