இதெல்லாம் ஒரு வேலையவே செய்றாங்கபா.! தனுஷ் படத்தை வைத்து விளையாடும் OTT நிறுவனம்.!
தனுஷ் நடிப்பில் தற்போதுஉருவாகியுள்ள திரைப்படம் மாறன். இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். ஆக்சன் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் மாளவிகா மோஹனன் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஹாட்ஸ்டார் OTT நிறுவனம் இம்மாதம் வெளியிடுவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த ட்ரைலரை ரசிகர்கள் தான் வெளியிட போகிறார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வந்தவுடன் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. எப்படி ரசிகர்கள் வெளியிடுவார்கள் என்று. ஒரு வேளை குறிப்பிட்ட ரசிகர்களை வைத்து விழா ஏதும் நடக்கிறதா என்று விசாரித்தால், அதுவும் இல்லை.
இதையும் படியுங்களேன் - விஜயை கடுமையாக தாக்கி பேசிய தயாரிப்பாளர்.! அஜித் மனசு யாருக்கு வரும்.?!
மாறாக படத்தின் ட்ரைலருக்காக #UnlockMaaranTrailer என்கிற டிவிட்டர் ஹேஸ்டேக்குகளை ரசிகர்கள் டிவிட்டரில் பதிவிட வேண்டும். அவ்வாறு பதிவிட்டு அந்த ஹேஸ்டேக் குறிப்பிட்ட எண்ணிக்கையை தாண்டிய பின் தானாகவே மாறன் ட்ரைலர் ரிலீஸ் ஆகிவிடும் என கூறப்படுகிறது.
அதனால் , தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் #UnlockMaaranTrailer இந்த ஹேஸ்டேக்கை அதிகமாக ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதனால் இன்னும் சில மணி நேரங்களில் மாறன் ட்ரைலர் ரிலீஸ் ஆகிவிடும் என கூறப்படுகிறது.