கச்சிதமாக காய்நகர்த்திய சிவகார்த்திகேயன்.. கைவிட்ட உதயநிதி.. மாவீரன் வசூல் எல்லாம் போச்சே!...

by சிவா |
maaveeran
X

சொந்தமாக படம் தயாரித்து அதில் கையை சுட்டு கொண்டவர் சிவகார்த்திகேயன். மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும்போது அவரின் சொந்த தயாரிப்பில் உருவான ரொமோ, சீமராஜா உள்ளிட்ட சில படங்கள் தோல்வி அடைந்தது. மேலும், சில படங்கள் என மொத்தம் ரூ.100 கோடி வரை கடனுக்கு ஆளானார். இதையடுத்து அவர் நடிப்பில் ஒவ்வொரு படமும் வெளியாகும் போதும் ‘அந்த பணத்தை கொடுத்துவிட்டு இந்த படத்தை ரிலீஸ் செய்’ என பணம் கொடுத்தவர்கள் அவரின் கழுத்தில் கத்தியை வைத்தனர்.

Sivakarthikeyan

Sivakarthikeyan

டாக்டர் பட வெளியீட்டின் போதும் இதுதான் நடந்தது. எனவே, தான் ஒவ்வொரு படம் நடிக்கும்போதும் ரூ.27 கோடியை கொடுத்துவிடுகிறேன் என சிவகார்த்திகேயன் ஒத்துக்கொண்டார். ஆனால், அதன்பின் பிரின்ஸ், டான் ஆகிய படங்கள் வெளியான போது சொன்னபடி சிவகார்த்திகேயன் பணம் கொடுக்கவில்லை. மாவீரன் படத்திற்கு பிரச்சனை வரும் என நினைத்து நைசாக உதயநிதியிடம் பேசி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் ரிலீஸ் செய்ய வைத்தார்.

ஏனெனில், உதயநிதி ரிலீஸ் செய்தால் அவரிடம் சென்று பிரச்சனை செய்யமாட்டார்கள் என கணக்கு போட்டு காய் நகர்த்தினார். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் உதயநிதியை தொடர்பு கொண்டு இந்த விஷயத்தை சொல்ல அதில் இருக்கும் நியாயத்தை புரிந்துகொண்ட அவர் ‘மாவீரன் பட வசூல் எல்லாவற்றையும் உங்களிடமே கொடுத்துவிடுகிறேன்’ என சொல்லிவிட்டாராம்.

உலக அளவில் இப்படம் இதுவரை ரூ.50 கோடி வரை வசூல் செய்துள்ளது. அதில் தமிழகத்தில் மட்டும் ரூ.15 கோடி வரை பங்கு வந்துள்ளது. இந்த பணம் இப்போது கூட்டமைப்புக்கு சென்றுவிட்டது. எனவே, சிவகார்த்திகேயன் அப்செட்டில் இருக்கிறாராம்.

இதையும் படிங்க: மிஷ்கினை பாத்தாலே தெறிச்சு ஓடும் கோடம்பாக்கம்! ‘மாவீரன்’ படத்தில் அண்ணன் செஞ்ச சம்பவம் அப்படி

Next Story