மாவீரன் திரைப்படத்தை மீண்டும் படமாக்கவுள்ளனரா?... உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்…
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் ஆகியோரின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “மாவீரன்”. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
“மாவீரன்” திரைப்படத்தில் இது வரை படமாக்கப்பட்ட காட்சிகள் எதுவும் இயக்குனருக்கு திருப்தியாக இல்லை என்பதால் மீண்டும் முதலில் இருந்து அத்திரைப்படத்தை படமாக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளிவந்தது.
இந்த நிலையில் பிரபல இயக்குனரான கேபிள் ஷங்கர் “மாவீரன்” திரைப்படத்தை மீண்டும் முதலில் இருந்து படமாக்கவுள்ளதாக வெளிவந்த தகவலின் உண்மைத்தன்மையை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது “மாவீரன்” திரைப்படத்தை மீண்டும் முதலில் இருந்து படமாக்கவுள்ளதாக வெளிவந்த தகவல் வெறும் வதந்தி என கூறியுள்ளார். அதே போல் சில மாதங்களுக்கு முன்பு “மாவீரன்” திரைப்படத்தில் இயக்குனர் மடோன்னே அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும் ஆதலால் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் கூட தகவல் வந்தது.
ஆனால் மழை காரணமாகத்தான் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக இயக்குனர் மடோன்னே அஸ்வினே ஒரு முறை தெரிவித்திருந்தார்.
சிவகார்த்திகேயன் இதற்கு முன் நடித்த “பிரின்ஸ்” திரைப்படம் சரியாக ஓடாத காரணத்தினால் “மாவீரன்” திரைப்படத்திற்காக ரசிகர்கள் வெறிக்கொண்டு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் சமீப காலமாக “மாவீரன்” திரைப்படம் குறித்து தேவையில்லாத வதந்திகள் பரவி வருவதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கோபத்துடனும் இருக்கிறார்களாம்.
இதையும் படிங்க: தளபதி 67 படத்தில் விஷால் நடிக்காததற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா?… என்னப்பா சொல்றீங்க!