வாரிசு படத்துக்கு வந்த பிரச்சனை இப்போ சிவகார்த்திகேயன் படத்துக்கும் வந்துருச்சே!… அடக்கொடுமையே…
கடந்த பொங்கல் தினத்தன்று விஜய் நடிப்பில் வெளியான “வாரிசு” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியானது. முதலில் இத்திரைப்படம் ஆந்திராவில் வெளியிட பல பிரச்சனைகள் கிளம்பியது.
பொங்கல் தினத்தன்று ஆந்திராவில் பாலகிருஷ்ணாவின் “வீர சிம்ஹா ரெட்டி”, சிரஞ்சீவியின் “வால்டர் வீரய்யா” போன்ற திரைப்படங்கள் வெளிவர தயாராக இருந்தன. இருவரும் தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர்கள் என்பதால் “வாரிசு” படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் கோபமடைந்தனர். எனினும் இந்த பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டு “வாரிசு” திரைப்படம் தெலுங்கில் ஓரளவு அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் இதே போன்ற ஒரு பிரச்சனையை சிவகார்த்திகேயன் திரைப்படம் சந்திக்கவுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “மாவீரன்” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை மடோன்னே அஸ்வின் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஆகஸ்து மாதம் 11 ஆம் தேதி வெளிவரவுள்ளது.
இந்த நிலையில் இத்திரைப்படம் தெலுங்கில் வெளிவர ஒரு சிக்கல் எழுந்துள்ளதாம். அதாவது இத்திரைப்படம் வெளியாகும் நாளில் சிரஞ்சீவியின் “போலோ ஷங்கர்” திரைப்படமும் வெளிவரவுள்ளது. ஆதலால் “வாரிசு” திரைப்படத்தை போலவே “மாவீரன்” திரைப்படத்திற்கும் திரையரங்கு சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கடுமையான காய்ச்சலிலும் படப்பிடிப்பை நிறுத்தாத ரஜினிகாந்த்.. பதறிப்போன படக்குழுவினர்…