Connect with us

ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு….விரைவில் துவங்கும் மயோன் 2… புதிய போஸ்டர் வெளியீடு

Cinema News

ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு….விரைவில் துவங்கும் மயோன் 2… புதிய போஸ்டர் வெளியீடு

சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிப்பில் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் திரைக்கதை மற்றும் தயாரிப்பில் என் கிஷோர் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் கடந்த 24ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் மாயோன்.

maayon

அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று கலந்தது என்பதை மையக் கருவாகக் கொண்டு உருவாக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் குடும்பத்துடன் கொண்டாடும் படமாக இடம் பிடித்துள்ளது. மேலும் பார்வையற்றவர்களுக்கான பிரத்தியேகமாக ஆடியோ டிஸ்கிரிப்ஷனுடன் படம் வெளியாகியதும் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது.

தமிழகத்தில் கிடைத்த வரவேற்பு காரணமாக இந்த படத்தை வரும் ஜூலை 7ஆம் தேதி தெலுங்கிலும் மிக பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு முடிவு செய்தது.

இந்நிலையில், இப்படத்தின் 2ம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளதோடு,இப்படத்தின் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இடது பக்கம் போகோ சிலை, நடுவில் நவபாசன சிலை, வலது புறம் இயேசு நாதர் சிலை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் ஆங்காங்கே வேல் இடம்பெற்றுள்ளது. இதனால் இது எந்த மாதிரியான கதை? முதல் பாகத்தில் பெருமாள் இடம் பெற்றது போல இரண்டாம் பாகத்தில் முருகனை மையமாகக் கொண்டு படம் உருவாகிறதா என்கிற ஆர்வம்

எழுந்துள்ளது. மாயோன் 2 திரைப்படம் 2023 தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், கன்னடம்,மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என 5 மொழிகளிலும் இப்படம்உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

maayon

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top