Connect with us
saravana store

‘மாயோன்’படக்குழுவின் அசத்தல் முயற்சி….பார்வை இல்லாதவர்களுக்கும் புரியும் ஸ்பெஷல் டீசர்…

maayon

Cinema News

‘மாயோன்’படக்குழுவின் அசத்தல் முயற்சி….பார்வை இல்லாதவர்களுக்கும் புரியும் ஸ்பெஷல் டீசர்…

சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், டத்தோ ரவி, கே.எஸ்.ரவிக்குமார், பகவதி பெருமாள், ஹரீஸ் பேரடி, அராஷ் ஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் மாயோன்.

இப்படதை என்.கிஷோர் என்பவர் இயக்கியுள்ளார். டபுள் மீனிங் புரடெக்‌ஷன் நிறுவனத்தின் சார்பாக இப்படத்தை அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரு கோவிலில் நிகழும் அமானுஷ்யமான சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

maayon

இப்படத்தின் டீசர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத வகையில் புதிய முயற்சியாக கண் பார்வையற்றவர்களுக்கும் புரியும் வகையில் ஒரு புதிய டீசரையும் மாயோன் படக்குழு உருவாக்கியுள்ளது.

அதாவது, டீசரில் வரும் ஒவ்வொரு காட்சியையும் ஒருவர் விளக்கி சொல்கிறார். கண்களை மூடி நாம் கேட்டால் கூட என்ன நடக்கிறது என்பது நமக்கு புரியும் வகையில் சிறப்பாக இந்த புதிய டீசரை உருவாக்கியுள்ளனர். நடிகர்களின் பெயர்களை கூட சொல்லி அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அவர் விளக்குகிறார்.

மாயோன் படக்குழுவினரின் இந்த புதிய முயற்சியை திரையுலகினர் பலரும் பாராட்டி வருகின்றனர். ரசிகர்களையும் இந்த டீசர் வீடியோ கவர்ந்துள்ளது. இந்த டீசர் வீடியோவை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top