
Cinema News
காட்சிக்கு காட்சி டிவிஸ்ட்… மிரளவைத்த மாயோன்… வெளியாகும் ட்வீட்டர் சூப்பர் விமர்சனம்…
கொஞ்ச நாட்களாக தமிழ் சினிமாவில் ஒரே நாளில் நிறைய படங்கள் வெளியாகி காலங்கள் ஓடிவிட்டன. அந்த குறையை இந்த வாரம் தீர்த்துவைத்துள்ளது தமிழ் சினிமா.
இன்றுவெளியான படங்களில் விஜய் சேதுபதி – சீனு ராமசாமி கூட்டணியில் வெளியான மாமனிதன் படத்திற்கு பிறகு, ரசிகர்கள் மனதில் அதிகமாக எதிர்பார்ப்பை தூண்டிய திரைப்படம் மாயோன் தான்.
தயாரிப்பாளர் அருள் மொழி மாணிக்கம் தான் இப்படத்திற்காக திரைக்கதை அமைத்து தயாரித்தும் உள்ளார். என்.கிஷோர் என்பவர் இயக்கியள்ளார். சிபி சத்யராஜ் ஹீரோவாக நடித்துள்ளார். தான்யா ரவிச்சந்திரன் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இப்படம் பார்த்த பலரும் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதில் பலர் தங்களது விமர்சனத்தை டிவிட்டர் மூலமாக பதிவிட்டு வருகின்றனர். அப்படி, டிவிட்டரில் பலர் கூறியிருப்பது. படத்தின் திரைக்கதையினை தான். அதில் வரும் திருப்பங்கள் ரசிகர்களை அடுத்து அடுத்து என்ன என எதிர்பார்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளதாம்.
இதையும் படியுங்களேன் – ப்ளீஸ் இனிமே அப்படி கூப்பிடாதீங்க.. வாய்ப்புக்காக நொந்து போன இளம் நடிகை…
பழங்கால கோவில்களை ஆராய்ச்சி செய்யும் அதிகாரியாக சிபி சத்யராஜ் நடித்துள்ளாராம். அவர் ஒரு கோவிலை ஆராய்ச்சி செய்கையில் அங்கு நடக்கும் மர்மங்கள் தான் படத்தின் கதைக்களமாமாக அமைந்துள்ளதாம். அனைவரும் பாராட்டுவது படத்தின் திரைக்கதையை எழுதி சிறிய கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாயோன் தயாரிப்பாளர் அருள்மொழி மாணிக்கம் அவர்களை தான்.
படத்திற்க்கு இசைஞானி இளையராஜா இசை மிக பெரிய பலம் என்கிறார்கள் படம் பார்த்தவர்கள். மொத்தத்தில் ஒரு நல்ல திருப்பங்கள் நிறைந்த, ஆன்மீக அனுபவம் கொண்ட நல்ல திரைப்படம் என பாராட்டி வருகின்றனர்.