டி.என்.ஏ பரிசோதனையில் வெளிவந்த உண்மை.. ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை!

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ். இவருக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்தது. இந்த நிலையில் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், கர்ப்பமாக்கிவிட்டு கைவிட்டுவிட்டதாகவும் பிரபல ஆடை

Madhampatty Rangaraj

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ். இவருக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்தது. இந்த நிலையில் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், கர்ப்பமாக்கிவிட்டு கைவிட்டுவிட்டதாகவும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா மாநில மகளிர் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்

இதனிடையே, ஜாய் கிரிசில்டாவிற்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ‘ராகா ரங்கராஜ்’ என அவர் பெயரிட்டார். ஆனால்,அந்தக் குழந்தை என்னுடையது அல்ல; மிரட்டி திருமணம் செய்து பணம் பறிக்கப் பார்க்கிறார். ஒருவேளை டி.என்.ஏ பரிசோதனையில் (DNA Test) அது எனது குழந்தை என நிரூபிக்கப்பட்டால், வாழ்நாள் முழுவதும் அக்குழந்தையை நானே பராமரிப்பேன் என மாதம்பட்டி ரங்கராஜ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இருவருக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. அதன்படி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு பரிசோதனை நடைபெற்றது. தற்போது, அந்த டி.என்.ஏ பரிசோதனையின் முடிவுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி செந்தில்குமார், டி.என்.ஏ அறிக்கையின்படி ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்பதை உறுதி செய்துள்ளார்.

CR
ஆசிரியர்

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →