விசில் போடு வெறுத்துப்போச்சு!.. நிறைய பேருக்கு புடிக்கல!.. கோட் பட பிரபலமே இப்படி சொல்லிட்டாரே!..

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளா ஆனா விசில் போடு பாடல் பலருக்கும் பிடிக்கவில்லை என ஓப்பன் ஆகவே அந்தப் பாடலை எழுதிய மதன் கார்க்கி தனது புதிய பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகர் விஜய்யின் 68-வது படமாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் சுருக்கமாக கோட் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா மகன் என இரு வேடங்களில் நடித்து வரும் நிலையில் மிடில் ஏஜ் கெட்டப்பில் பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் உடன் நடனமாடும் பார்ட்டி சாங்காக இந்த பாடல் உருவாகி இருக்கிறது.

இதையும் படிங்க: சீதாவா நடிச்சிட்டு இப்படி சீன் காட்டுறீயேம்மா!.. சமந்தாவை தொடர்ந்து இவரும் இப்படி இறங்கிட்டாரே!..

பொதுவாகவே விஜய் பாடினால் அந்த பாடல் மிகப்பெரிய வெற்றிப் பாடலாக மாறிவிடும். ஆனால், யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் பாடியுள்ள இந்த விசில் போடு பாடல் பலருக்கும் பிடிக்கவில்லை என அந்த பாடலுக்கு எழுதிய மதன் கார்க்கி பேசி இருப்பது விஜய் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

இந்த பாடல் பலருக்கும் பிடிக்கவில்லை என்று கூறுகின்றனர். பலர் நன்றாக இருக்கிறது என பாடலை 30 மில்லியன் வியூஸ் கடந்து பார்த்து வருகின்றனர். பாடல் புரியவில்லை என்று சொல்பவர்களும் உள்ளனர். இதுக்கு முன்னதாக விஜய்க்கு நான் எழுதிய கூகுள் கூகுள் பாடல், செல்ஃபி புள்ள பாடல்களுக்கும் இதே போன்ற கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தன. முதலில் கூகுள் கூகுள் பாடலை பலரும் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் அதன் பின்னர் அந்த பாடல் மிகப்பெரிய வெற்றி பாடலாக மாறியது. அதே நிலமை தான் செல்ஃபி புள்ள பாடலுக்கும் அப்போ இந்த விசில் போடு பாடலும் கொஞ்ச நாட்கள் கழித்து நிச்சயம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கிறேன் எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சித்தார்த் கொடுத்த செருப்படி விஷால் படத்திற்கும் பொருந்தும்.. என்ன சொல்கிறார் இந்த பிரபலம்?..

இந்த பாடலை உருவாக்கும் போது நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக அறிவிப்பை வெளியிடவில்லை. எந்த அர்த்தத்தில் கேட்டாலும் அவர்களுக்கு ஏற்றவாறு இந்தப் பாடல் திருப்தி அளிக்கும் வகையில் உருவாக்கியுள்ளேன் முதல் முறை பாடல் வரிகளை பார்த்ததும் வெங்கட் பிரபு ஓகே சொல்லிவிட்டார்.

முதலில் விசில் போடுக்கு பதிலாக சல்யூட் வார்த்தையை பல மொழிகளில் பயன்படுத்த திட்டமிட்டேன். கடைசியில் அதை மட்டும் விசில் போடு என மாற்றி கொண்டாட்ட பாடலாக இதை உருவாக்கினோம் என விசில் போடு பாடல் குறித்து விரிவாக பேசியுள்ளார் மதன் கார்க்கி.

இதையும் படிங்க: விஷாலுக்கு பெரிய துரோகத்தை செய்தாரா உதயநிதி ஸ்டாலின்?.. நோண்டி நொங்கெடுத்த பிரபலம்!..

 

Related Articles

Next Story