டெரர் லுக்கில் எஸ்.கே!. மதராஸி பட புது போஸ்டர் வந்துடுச்சே!. ரிலீஸ் தேதியையும் சொல்லிட்டாங்களே!..

Madharasi: விஜய் டிவியில் ஆங்கராக பணிபுரிந்து அதன்பின்னர் சினிமாவில் நுழைந்தவர் சிவகார்த்திகேயன். இவருக்கு சினிமா குடும்ப பின்னணியெல்லாம் இல்லை. துவக்கத்தில் பல ஆர்கெஸ்ட்ராக்களில் மிமிக்ரி செய்து வந்தார். அதன்பின் விஜய் டியில் ஆர்.ஜே. வேலைக்கு சேர்ந்தார். மிகவும் குறைவான சம்பளத்தில் வேலை செய்திருக்கிறார்.
மெரினா படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களின் வெற்றியால் இவர் மார்கெட் ஜெட் வேகத்தில் மேலே போனது இவருக்கு முன் சினிமாவுக்கு வந்த சீனியர் நடிகர்களான விக்ரம், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி, தனுஷ், சிம்பு, விஷால் உள்ளிட்ட பலரையும் ஓவர்டேக் செய்து அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார்.
சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை கண்டு பலரும் பொறாமைப்பட்டனர். ஒருபக்கம் சொந்த பணத்தில் படங்களை தயாரித்து நஷ்டமும் அடைந்தார். 100 கோடிக்கும் மேல் கடனாளி ஆகி பல வருடங்களாக போராடி அந்த கடனை அடைத்தார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்த அமரன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது.
எனவே, இனிமேல் பெரிய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடிப்பது என சிவகார்த்திகேயன் முடிவெடுத்தார். அப்படித்தான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்கிற படத்தில் நடிக்க துவங்கினார். தர்பார் படம் வெளியாகி 4 வருடங்கள் கழித்து முருகதாஸ் இயக்கியுள்ள படம் இது.
இந்த படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்தநிலையில் சல்மான்கானை வைத்து சிக்கந்தர் என்கிற ஹிந்தி படத்தை இயக்கப்போனார் முருகதாஸ். இதனால் மதராஸி படம் கிடப்பில் போடப்பட்டது. எனவே, அமரன் படத்தில் நடித்து முடித்துவிட்டு சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடிக்கப்போய்விட்டார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில்தான், மதராஸி படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அறிவிப்போடு ஒரு புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. முருகதாஸ் இயக்கிய சிக்கந்தர் படம் ரம்ராஜுனுக்கு வெளியாகி தோல்வி அடைந்துவிட்டது. எனவே, மதராஸி படத்தையே முருகதாஸ் நம்பியிருக்கிறார்.