சூர்யாவுக்கு செஞ்சத நினைச்சு பாக்கும் போது கேவலமா இருக்கு...! மேடையில் வருத்தப்பட்ட மாதவன்..!
தமிழ் சினிமாவில் பெண்களின் மனதை கொள்ளை கொண்ட ஹீரோக்களில் முதன்மையானவர் நடிகர் மாதவன். அலைபாயுதே படத்தில் இவரை பார்த்து இளம் பெண்கள் பாதி பேர் பைத்தியம் பிடித்த மாதிரி சுற்றி கொண்டு இருந்தார்கள். அந்த அளவுக்கு ரொமான்ஸ், பர்ஸனால்டி கொண்ட நாயகனாக நடித்திருந்தார்.
அந்த படத்திற்கு பிறகு தமிழில் ஏகப்பட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நிரந்தரமான இடத்தை பிடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் தன் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தார். ஆனால் கொஞ்ச நாள் தமிழ் படங்களில் அவரை காண முடியவில்லை. இந்த நிலையில் ராக்கெட்டரி என்ற படத்தின் மூலம் இயக்குனராக புது அவதாரம் எடுத்துள்ளார் மாதவன்.
இஸ்ரோவில் முதன்மை அதிகாரியாக இருந்த நம்பி நாராயணனின் வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்கள்,அவமானங்கள், அதை எப்படி எதிர்கொண்டார் என்பதை கதையாக நம் கண்முன் நிறுத்த வருகிறார் மாதவன். இதில் நம்பியாகவே நடித்தும் உள்ளார்.
மேலும் இந்த படத்தின் பிரஸ் மீட்டில் பேசும் போது நடிகர் சூர்யாவை பற்றியும் பெருமையாக பேசியிருந்தார். ஏனெனில் விக்ரம் படத்திற்கு பிறகு இந்த படத்திலும் சூர்யா ஒரு பைசா கூட வாங்காமல் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம். இதிலும் அவரின் நடிப்பு பிரம்மாதமாக பேசப்படும் என கூறினார். மேலும் கூறுகையில் போக்குவரத்து செலவு கூட வேண்டாம் என சொல்லிவிட்டதாகவும் கைமாறாக சூர்யாவிற்கு நான் எதுவும் பண்ணவில்லை , ஒரு கிஃப்ட் கூட கொடுக்க வில்லை, இதை நினைத்தால் எனக்கு கேவலமாக இருக்கு எனவும் கூறினார்.