காக்க காக்க படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா? ரசிகர்கள் அதிர்ச்சி...!
தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபகாலமாக வெளியான சூரரை போற்று, ஜெய்பீம் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. வசூலை விட இந்த இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வெற்றியை பெற்றது. பலரின் பாராட்டையும் தட்டி சென்றது.
இதன் மூலம் சூர்யா இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தற்போது மட்டுமல்லாமல் இவர் நடிக்க வந்த தொடக்கத்திலும் பல வெற்றி படங்களை வழங்கியுள்ளார். அந்த வகையில் சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது காக்க காக்க படம் தான்.
ஒரு கம்பீரமான காவல்துறை அதிகாரியாக மிடுக்கான தோற்றத்தில் மிரட்டி இருப்பார். கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருப்பார். காக்க காக்க படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது.
இந்நிலையில் இப்படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குனர் கௌதம் மேனன் முதலில் இப்படத்தில் நடிகர் மாதவனைதான் ஹீரோவாக நடிக்க வைக்க தேர்வு செய்துள்ளார். ஆனால் ஒரு சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனதாம்.
அதன் பின்னரே இறுதியாக சூர்யா இப்படத்தில் நடிக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கிடையில் விக்ரம் மற்றும் அஜித்திடம் கூட ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது. என்ன இருந்தாலும் இந்த படத்திற்கு பொருத்தமான நடிகர் என்றால் அது சூர்யா தான். அவருக்கு தான் அந்த கேரக்டர் கச்சிதமாக பொருந்தி இருந்தது என ரசிகர்கள் கூறியுள்ளனர்.