எனக்கு இருந்த பிரச்சினை.. நயன் ஒத்துக்கவே இல்ல.. மாதவனை மிரட்டிய லேடி சூப்பர் ஸ்டார்

by Rohini |   ( Updated:2025-03-29 05:29:30  )
nayan
X

nayan

டெஸ்ட் படம்: தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கிய திரைப்படம் தான் டெஸ்ட். இந்த படம் வரும் ஏப்ரல் நான்காம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இந்த படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா ,மீரா ஜாஸ்மின் என முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை மக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியில் இப்போது படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.

மாதவனுக்கு இருக்கும் பிரச்சினை: பல்வேறு youtube சேனல்களுக்கு இயக்குனரும் தயாரிப்பாளருமான சசிகாந்த் மற்றும் மாதவன் பல பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். படத்தின் துவக்க விழாவும் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. இந்த நிலையில் மாதவன் நயன்தாராவை பற்றி ஒரு பேட்டியில் கூறியது மிகவும் சுவாரசியமான கதையாக அமைந்தது. அதாவது மாதவனுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை என்னவெனில் படங்களில் நடிக்கும் பொழுது லைவ் சவுண்டில் தான் நடிப்பாராம்.

அடம்பிடிக்கும் மாதவன்: பிராம்ப்ட் எதுவும் வைத்துக்கொள்ள மாட்டாராம். அப்பொழுது தான் உண்மையான உணர்வை வெளிப்படுத்த முடியும் என்பது அவருடைய நம்பிக்கை. ஏன் விளம்பர படங்களில் நடிக்கும் போது கூட லைவ் சவுண்டில் தான் மாதவன் நடிப்பாராம். லைவ் சவுண்ட் இல்லை எனில் படத்தில் நடிக்க ஒத்துக்கவே மாட்டாராம் மாதவன். அப்பொழுதுதான் எமோஷனலை சரியாக டெலிவர் பண்ண முடியும் என்று கூறியிருக்கிறார் மாதவன்.

தயங்கிய நயன்: ஏனெனில் எடிட்டிங்கிலேயே அதைப் பேசி மாற்றி விடுவார்கள். லைவ் சவுண்ட் இருந்தால்தான் அப்படியெல்லாம் பண்ண மாட்டார்கள். இதை நயன்தாராவிடம் சொல்லி இருக்கிறார் மாதவன். நயன் இதுவரை லைவ் சவுண்டில் நடித்ததே இல்லை. இதைக் கேட்டதும் முதல் நாள் ஓகே என சொல்லிவிட்டாராம் நயன். ஆனால் முதல் நாளில் அவருடைய காட்சியில் நிறைய பிரச்சனை இருந்ததாம்.

test

அதனால் இதை நான் லைவ் சவுண்டில் பண்ண முடியாது. பிராம்ப்ட் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறினாராம் நயன். ஆனாலும் மாதவன் ‘நயன் தயவு செய்து இன்னிக்கு மட்டும் இதை பண்ணி விடுங்கள். இது சரிவரவில்லை என்றால் நாளையில் இருந்து மாற்றிக் கொள்ளலாம்’ என்று கூறினாராம் மாதவன். ஆனால் இவர் சொன்னாலும் மாதவனுக்குள் ஒரு பயம் இருந்தது .ஏனெனில் நாம் எப்படி மாற்றப் போகிறோம் என்றுதான் இவருக்குள் பயம் இருந்ததாம் .

ஆனால் அந்த சீனில் நயனுக்கு நிறைய எமோஷன் இருந்ததாம். ஆனால் அந்த லைவ் சவுண்டில் அவர் பண்ணது மிகவும் அனுபவம் வாய்ந்த ஒரு பெரிய நடிகரால் மட்டுமே தான் பண்ண முடியும் .அதை நயன்தாரா சரியாக பண்ணினார். அதை நயனும் கேட்டார். கேட்டதும் ஏன் இதை நான் முன்பே படங்களில் பண்ணாமல் விட்டேன் என வருத்தப்பட்டாராம் .அந்த அளவுக்கு நன்றாக செய்து முடித்தார் நயன் என மாதவன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

Next Story