Connect with us
run-1

Cinema History

மாதவனுக்கு வேற லெவல் வெற்றியை கொடுத்த ரன்

இந்தி படங்களின் மூலம் 1996லேயே சினிமாவில் அறிமுகமானவர் மாதவன்
நடிகர் மாதவன் 2000ம் ஆண்டு வெளிவந்த அலைபாயுதே படத்தில் அறிமுகமானார். முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அவருடைய புகைப்படம் மற்றும் அலைபாயுதே படத்தை பற்றிய செய்திகளை படித்து விட்டு மாதவனுக்கு பெண் ரசிகைகள் அதிகமாயினர். அலைபாயுதே படத்துக்கு பின் ரசிகைகள் இன்னும் அதிகமாயினர்.
பொதுவாக மணிரத்னம் படம் ஏ சென் டர்கள் என சொல்லக்கூடிய பெருநகரங்களில் மட்டும்தான் ஓடும். அலைபாயுதே படமும் பெரு நகரங்களை தவிர மற்ற இடங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

run-1

அதற்கு அடுத்தபடியாக என்னவளே என்ற திரைப்படம் வந்தது. இது விக்ரமன் டைப் படமாக இருந்தது.

தொடர்ந்து, டும் டும் டும், பார்த்தாலே பரவசம் போன்ற படங்களில் நடித்தார் எல்லாம் பெரிய இயக்குனர்கள் படங்கள்தான். பார்த்தாலே பரவசம் எல்லாம் சாக்லேட் பாய் கேரக்டர் டைப் படம்தான் படம் பெரிய அளவில் போகவில்லை. இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய படமிது.

தொடர்ந்து சாக்லேட் பாயாக நடித்துக்கொண்டிருந்த படங்கள் எதுவும் பெரிய அளவில் மாதவனுக்கு கை கொடுக்கவில்லை.

run-2

பிறகு மின்னலே வந்தது இந்த படம் பெரிய அளவில் வெற்றிப்படமானது. இயக்குனர் கவுதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ் அனைவருமே இதில்தான் அறிமுகமாயினர். இப்படம் பெரிய அளவில் கை கொடுத்தாலும் இதிலும் சாக்லேட் பாய் வேடம்தான்.
தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோவாக வெற்றி பெற்றால்தான் அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னேற்றம் அடைய முடியும் என்பது விதி. மாதவனுக்கு சாக்லேட் பாய் டைப் படங்களாக வந்த நேரத்தில் எதிர்பாராமல் 2002ஆண்டு வந்த படம்தான் ரன்.

ஆனந்தம் படம் மூலம் வெற்றி பெற்று அப்போதுதான் அடுத்த சக்ஸசுக்காக இயக்குனர் லிங்குசாமி இயக்கிய படம் இது. இருந்தாலும் அந்த நேரத்தில் லிங்குசாமி பெரிய இயக்குனர் இல்லை. 1 படம் ஹிட் கொடுத்த அறிமுக இயக்குனர்தான்.
மாதவன் அறிமுகமான காலத்திலேயே நடித்தது எல்லாம் பெரிய இயக்குனர்களின் படங்கள்தான் ஆனால் பெரிய சக்ஸஸ் இல்லாத அந்த நேரத்தில் அறிமுகமாகி இருந்த சிறிய இயக்குனரான லிங்குசாமி இயக்கிய ரன் படமே பெயருக்கு ஏற்றார்போல ஓடி மாதவனுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தது.

run-3

சாதாரண கதைதான் இது. திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் சிவாவாக மாதவன். அங்கு அக்கா வீட்டில் தங்கி வேலை தேடிவரும் நிலையில் மீரா ஜாஸ்மினுடன் அறிமுகம் ஏற்படுகிறது அவரை விரட்டி விரட்டி காதலிக்கிறார்.
மீரா ஜாஸ்மினின் அண்ணன்கள் ரவுடிகள் என தெரியாமல் மாதவன் மீரா ஜாஸ்மினுடன் பார்க்கும் இடங்களில் எல்லாம் லவ் ப்ரோப்பொசல் செய்கிறார். ஒரு கட்டத்தில் மீரா தன் அண்ணன்கள் பற்றி சொல்லி விட, அப்படியும் மாதவன் மீராவை காதலிக்கிறார் அவர்களுக்குள் காதல் பூத்து விடுகிறது.

run-4

கொடூர அண்ணன்களாக வரும் மீரா ஜாஸ்மின் அண்ணன்கள் ரவுடிகளை வைத்து மாதவனை துரத்து துரத்து என துரத்துகின்றனர்.

இறுதியில் ரவுடிகளை வென்று , மீரா ஜாஸ்மின் அண்ணனுடன் ஒத்தைக்கு ஒத்தை மோதி ஜெயிப்பதுதான் கதை.

தமிழ் சினிமாவில் இது போல ஸ்பீடான படத்தை இயக்கியதில் லிங்குசாமியை முன்னோடி என கூறலாம். இந்த படத்துக்கு பின் தான் இது போல ஸ்பீடான படங்கள் வரிசையாக வர துவங்கியது.

ரவுடிகளிடம் மாட்டிக்கொண்ட மாதவன்சப் வேயில் வேகமாக ஓடி சப்வேயின் பெரிய ஷட்டரை சாத்திவிட்டு ரவுடிகளை பெண்டு எடுக்கும் ஆக்சன் காட்சிகளை தியேட்டரில் ரசிகர்கள் ரொம்பவே ரசித்து பார்த்தனர். வேற லெவல் ஆக்சன் காட்சி அது.
இது போல க்ளைமாக்ஸ் வரை அதிரடியாக படம் நகர்ந்து கொண்டே இருக்கும்.

படத்தின் வில்லனாக ஹிந்தி நடிகர் அதுல் குல்கர்னி நடித்திருந்தார். நாளைக்கு உன் தங்கச்சிய வந்து தூக்குறண்டா என மாதவன் சவால் விட்டு போனதில் இருந்து புரியாத புதிர் படத்தில் ரகுவரன் ஐ நோ ஐ நோ என பேசியது போல அவன் வருவானாடா அவன் வருவானாடா என சக ரவுடிகளிடம் நீண்ட நேரம் கேட்டுக்கொண்டே இருப்பது போல் காட்சி வரும். ஒரு கட்டத்தில் அவன் வருவான் ஆனா நிச்சயமா திரும்பி போக மாட்டான் என ஆக்ரோசமாக தெறிக்க விடும்படி டயலாக் பேசுவார் அதுல் குல்கர்னி.
இந்த படத்தின் ப்ளஸ்ஸே சண்டைக்காட்சிகள்தான் அதனால்தான் இந்த படம் பெரிய வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தது. இப்படத்தின் சண்டைக்காட்சிகளை சிறப்பாக அமைத்தவர் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர்.

run-5

படத்தின் திரைக்கதை நன்றாகவே இருந்தாலும் படத்தில் சண்டையையே தொடர்ந்து பார்க்க கூடாது பார்த்தால் ஃபோர் அடிக்கும் என்ற எண்ணத்தில் விவேக்கின் காமெடி டிராக்கும் இணைக்கப்பட்டது. காக்கா பிரியாணி, கிட்னி ஆபரேஷன், என விவேக்கும் காமெடியில் கலகலக்க வைத்தார் படம் தொய்வடையாமல் விவேக்கின் காமெடியும் படத்துக்கு ரொம்ப ப்ளஸ் ஆக அமைந்தது.
மீரா ஜாஸ்மினுக்கு முதல் தமிழ் படம் தான் ஆனால் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

மாதவனின் அக்காவாக அனுஹாசன், அத்தானாக ரகுவரன் நடித்திருந்தனர். ரகுவரனை மாதவனுக்கு பிடிக்காமல் போனதற்கான காரணமும் ரகுவரனுக்கும் மாதவனுக்கும் இருக்கும் பாசப்பிணைப்பை இயக்குனர் இப்படத்தில் வேறு கோணத்தில் சொல்லி இருப்பார்.

வித்யாசாகரின் இசையில் பாடல்களும் நன்றாக வந்தன, தேரடி வீதியில், காதல் பிசாசே, பொய் சொல்ல கூடாது காதலி போன்ற பாடல்கள் பெரிய அளவில் ரீச் ஆகின.
ஒரு படத்தில் கதை, திரைக்கதை, பாடல்கள், இசை , நடிப்பு, காமெடி, ஆக்சன் என எல்லாமே பெரிய ஹிட் என்றால் படமும் பெரிய ஹிட்தானே அப்படித்தான் ரன் ஹிட் ஆனது.

இப்படத்தில் இன்னொரு குறிப்பிட்டு சொல்ல வேண்டியவர் ஒளிப்பதிவாளர் ஜீவா. அழகிய சண்டைக்காட்சிகளை சூப்பரான ஷாட்டுகளை அழகாக படமாக்கினார்.
படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜீவாவும், காமெடிக்கு வலு சேர்த்து படத்தின் வெற்றிக்கு துணையாக நின்ற விவேக்கும் தற்போது இல்லை.
அவர்கள் இல்லாவிட்டாலும் நீண்ட காலம் அவர்களது பெயரை ரன் படம் சொல்லிக்கொண்டே இருக்கும்.

மிகச்சிறப்பான அருமையான படம் இது. ரசிகர்களால் என்றும் மறக்க முடியாத படம் இது.

 

 

google news
Continue Reading

More in Cinema History

To Top