சம்பள விஷயத்தில் ஹீரோக்களை குற்றம் சாட்டுவது சரியா?.. அப்பவே சவுக்கடி கொடுத்த மாதவன்..

by Rohini |   ( Updated:2023-03-12 10:00:02  )
madi
X

madhavan

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பெண்களை கவர்ந்த கனவு நாயகனாக வலம் வந்தவர் தான் நடிகர் மாதவன். நடிப்பையும் தாண்டி ஒரு சிறந்த அறிவார்ந்த நடிகரும் கூட. சினிமாவை பற்றிய அறிவு அவரிடம் தாராளமாகவே இருக்கின்றது.

சார்மிங் மாதவன்

நடிப்பு, இயக்கம் என பிஸியாக இருந்தாலும் தமிழில் அவரை மீண்டும் பழைய மாதவனாக பார்க்க முடிவதில்லை. ‘அலைபாயுதே’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பெண்களின் தூக்கத்தை கெடுத்த இளம் ஹீரோவாக வலம் வந்தார் மாதவன். மேடி, மேடி என செல்லமாக அழைக்க ஆரம்பித்து விட்டனர்.

madi1

madhavan

ஆனால் அந்த ஒரு படம் தான் மாதவனை எங்கேயோ கொண்டு சென்றது. அதனை தொடர்ந்து அதே ஃபார்மில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ‘என்னவளே’ படத்தில் நடித்தார். ஆனால் அலைபாயுதே படம் கொடுத்த
வரவேற்பை அந்தப் படம் மாதவனுக்கு கொடுக்கவில்லை.

மாரிமுத்துவின் அலறல்

இந்த நிலையில் இப்ப உள்ள ஹீரோக்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள், கோடி கோடியாக வாரி இறைக்கிறார்கள் என பல பேர் கொதித்துக் கொண்டிருக்க அதற்கு எல்லாம் ஹீரோக்களை குற்றம் சாட்டுவது தப்பு என்பது மாதிரி சீரியல் நடிகரும் குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து மாதவனின் சில விஷயங்களை முன்வைத்தார்.

அதாவது அலைபாயுதே படத்திற்கு பிறகு என்னவளே படம் சரியாக ஓட வில்லை. அதனை அடுத்து எப்படியாவது அடுத்த படத்தில் என்ன கதையானாலும் நடித்த விடவேண்டும் என்று எண்ணிய மாதவன் அந்த தயாரிப்பாளரிடம் ஒரு கணிசமான தொகையாக அதிக சம்பளத்தை கேட்டிருக்கிறார்.

madi2

marimuthu

அதற்கு அந்த தயாரிப்பாளர் முந்தைய படம் சரிவர ஓடவில்லை, என்ன தைரியத்தில் சம்பளத்தை இந்த அளவுக்கு உயர்த்திக் கேட்கிறாய் என்று கேட்டாராம். அதற்கு மாதவன் ‘ஓ அப்படியா? நான் அழகா இருக்கேன், நன்றாக நடிக்கவும் செய்வேன், அதனால் தான் இந்த தகுதியை வைத்து தான் சம்பளத்தை உயர்த்திக் கேட்டேன், ஆனால் இப்பொழுது தான் தெரிகிறது, முந்தைய படங்கள் தான் என் சம்பளத்தை தீர்மானிக்கிறது என்று’ என்று சொல்லிவிட்டு சாரி கேட்டுப் போய்விட்டாராம்.

மாதவன் நெத்தியடி

அதன் பிறகு ரன் படத்தில் நடித்து அது மாபெரும் வெற்றியை பதிவு செய்ய மீண்டும் அடுத்த படத்திற்காக அதே தயாரிப்பாளர் தான் வந்திருக்கிறார். அப்போதும் சம்பளத்தை பற்றி கேட்டிருக்கிறார் தயாரிப்பாளர். அப்போது மாதவன் அந்த தயாரிப்பாளருக்கு நெஞ்சு வலி வருகிற மாதிரி சம்பளத்தை கேட்டிருக்கிறார். உடனே அந்த தயாரிப்பாளர் ‘ஏன் இப்படி உயர்த்திட்டீங்க?’ என்று கேட்டிருக்கிறார்.

madi3

madhavan

அதற்கு மாதவன் ‘ நீங்கள் தானே சொன்னீர்கள், அதனை வைத்து தான் ரன் படம் மிகப்பெரிய வெற்றி, அதை வைத்து தான் சம்பளததை கேட்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். ஆகையால் இதை குறிப்பிட்டு பேசிய நடிகர் மாரிமுத்து ஹீரோக்களின் சம்பளத்தை உயர்த்திவிட்டதே தயாரிப்பாளர்கள் தான். அதை விட்டு அந்த ஹீரோ அவ்ளோ ஏத்திட்டாரு, இந்த ஹீரோ இவ்ளோ ஏத்திட்டாருனு சொல்லுவது எப்படி சரியாகும் என்று கூறினார்.

இதையும் படிங்க : அஜித் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட ரஜினி!.. படத்தை பார்த்து இயக்குனரிடம் சண்டை போட்ட தலைவர்..

Next Story