தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு நலல் வசூலை வாரிகுவித்தன. பல ஆண்டுகளுக்கு முன்பு வெளீயான படங்களை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப 4K தொழில்நுட்பத்தில் ரிலீஸ் செய்து வருகின்றனர். இதில் விஜய் நடித்த கில்லி, ரஜினி நடித்த படையப்ப, விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் போன்ற படங்கள் ரீ ரிலீஸிலும் நல்ல வசூலை பெற்றன. சில படங்கள் பெரிய வரவேற்பும் இல்லாமல் போயுள்ளன. விஜய் நடித்த தெறி ரீரிலீஸில் ரசைர்களை பெரிது கவரவில்லை.
அந்த வரிசையில் தற்போது சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற தம்பி திரைப்படம் வருகிற 17-ம் தேதி மீண்டும் திரைக்கு வரவுள்ளது.
தமிழ் சினிமாவில் அலை பாயுதே படத்தில் அறிமுகமானதில் இருந்தே சாக்லேட் பாயாக மாதவன் இந்த படத்தில் பக்கா ஆக்சன் வேடத்தில் நடித்திருந்தார். 2006-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் மாதவனின் தோற்றமும், ஆக்ரோஷமான உடல்மொழியும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
நாம் தமிழர் இய்க்க தலைஅவ்ர் சீமான் இப்படஹ்தை இயக்கியிருந்தார். சீமானின் திரைப்பயணத்தில் ‘தம்பி’ மிக முக்கியமான ஒரு திரைப்படம். சமூகத்தின் மீதும், அநீதிக்கு எதிராகவும் ஒரு சாமானிய இளைஞனுக்கு இருக்கும் கோபத்தை மிகவும் அழுத்தமாக இந்தப் படத்தில் பதிவு செய்திருப்பார் சீமான். மாதவனுடன் பூஜா, வடிவேலு என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். வித்யாசாகரின் இசை படத்திற்கு பெரும்பலமாக் இருந்தது. குறிப்பாக சுடும் நிலவு சுடாத சூரியன் , “கனவனா… என் கணவனா”, சும்மா கிடந்த நிலத்தை போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களின் பிளேலிஸ்ட்டில் உள்ளன.
இந்த நிலையில் தம்பி வருகிற 17ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படமும் கில்லி, படையப்பா வரிசயில் நிச்சயம் வசூல் புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…
நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…