அந்த சீன் இல்லாம எப்படி...? தெறித்தோடிய தயாரிப்பாளர்கள்...மாதவன் எடுத்த அதிரடியான முடிவு...
இளமை துள்ளும் அழகுடன் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகர் மாதவன். நடிக்க வந்த புதிதில் பெண்களின் மனதை கொள்ளை கொண்டவர் நம்ம மேடி. அலைபாயுதே படத்தில் இவரின் நடிப்பு, ரொமான்ஸ்ஸ் காட்சிகள் இன்று வரை பெண்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது.
அதன் பிறகு வந்த டும் டும் டும் படமும் அதே வரிசையில் அமைந்த காதல் கலந்த ரொமான்ஸ் படமாக அமைந்ததால் ஒட்டுமொத்த இளம் பெண்களையும் பித்து பிடிக்க வைத்தார். இப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்த மாதவனின் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக சரிய தொடங்கியது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இறுதிச்சுற்று, விக்ரம் வேதா போன்ற படங்களில் நடித்தார். படமும் ஓரளவிற்கு பேசப்பட்டது. அதன் பின் பட வாய்ப்புகள் வரவில்லை. கடந்த இரண்டு வருடங்களாகவே எந்தவொரு படங்களிலும் நடிக்காமல் அவரே ஒரு படத்தை இயக்கும் பணியில் மும்முரமானார்.
அந்த படம் தான் நேற்று ரிலீஸான ராக்கெட்டரி: நம்பி விளைவு. இந்த படத்திற்காக ஸ்கிரிப்டை முழுவதுமான எழுதி தயாரிப்பாளர்களிடம் காட்ட அவர்களும் பார்த்து சரி என்று வர படத்தில் யாரு ஹீரோயின் என கேட்டனராம். ஹீரோயின் இல்லை என கூற பாடல் எத்தனை என கேட்டனராம். அதற்கும் இல்லை என கூற சண்டை காட்சிகள் உண்டா என கேட்டனராம். அதற்கும் இல்லை என மாதவன் கூற தயாரிப்பாளர்களும் இல்லை என ஓடிவிட்டனராம். அதன் பின் அவரே இறங்கி பணத்தை போட்டு இந்தப் படத்தை தயாரித்துள்ளார் மாதவன். ஆனால் படம் வெளியாகி ஓரளவே நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.