இதுவரை ’gossip’ ல சிக்கல...! இது தான் காரணம்...டிப்ஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்...!
கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘பிரேமம்’. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் அந்த படம் வெகுவாக கவர்ந்தது.
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் நடிகை மடோனா செபஸ்டியன். அதன் பின் தமிழில் காதலும் கடந்து போகும் , பவர் பாண்டி , வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பு மட்டுமில்லாமல் ஒரு பாட்கியும் ஆவார். மேலும் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களில் தனது அழகிய புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்.
இந்த நிலையில் சினிமாவில் காஸிப்புக்கு சிக்காத நடிகைகளே இருக்க மாட்டார்கள். ஒரு சில பேர் வேணுனா அதிலிருந்து தப்பித்து இருக்கலாம். அந்த வகையில் இதுவரை எந்தவொரு காஸிப்பிலயும் சிக்காமல் இருக்கும் நடிகை மடோனா செபாஸ்டியன் என ஒரு பத்திரிக்கை நண்பர் கூறி அவரிடம் கேட்க அதுக்கு மடோனா அதுக்கு காரணம் நான் எப்பொழுதும் சூட்டிங், சூட்டிங் முடிஞ்சு வீடு என இருப்பதால் தான் இது சாத்தியமாகி இருக்கு என கூறினார்.