மடோனாவின் மஜா பண்ணும் புகைப்படம்...! அதுவும் இவர்களுடனா..?

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். முதல் படத்திலேயே பெருவாரியான ரசிகர்களின் மனம் கவர்ந்த பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார்.
அதன் பிறகு தமிழில் காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து கவண், பவர் பாண்டி, ஜூங்கா, வானம் கொட்டடும் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இதையும் படிங்கள் : நிர்வாணமா நடிக்க சொல்லி கட்டாயப்படுத்துனாங்க…. பகீர் கிளப்பிய பிரபல நடிகை….!
தொடர்ந்து நல்ல வாய்ப்புகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் மடோனா தனது உடல் எடையை குறைத்து சிக்கென தோற்றத்திற்கு மாறிவிட்டார். இந்நிலையில் தனது நீண்ட நாள் பள்ளி தோழிகளுடன் சந்தித்ததை போட்டோ எடுத்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். ரொம்ப நாள் கழித்து சந்தித்ததால் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.