Entertainment News
மணக்கோலத்தில் மடோனா செபாஸ்டியன்… ஹார்ட் பீட் எகிற வைக்கும் அழகு!
அழகிய உடையில் மனதை கவர்ந்திழுத்த மடோனா செபாஸ்டியன்!
மலையாள நடிகையான மடோனா செபாஸ்டியன் 2015 ஆம் ஆண்டில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படத்தில் நடித்து இந்திய சினிமா அளவில் பிரபலனார். அறிமுகமான முதல் திரைப்படமே அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.
அதன் பிறகு பல மொழிகளில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க தமிழில் காதலும் கடந்து போகும் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக கோலிவுட்டில் அறிமுகமானார். இந்த படமும் சூப்பர் ஹிட் அடிக்க தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இதையும் படியுங்கள்: ப்பாஹ் என்ன பொண்ணுடா… அநியாயத்துக்கு அழகா இருக்கும் லாஸ்லியா!
அதன் பிறகு கவண், ப பாண்டி, ஜூங்கா, வானம் கொட்டடும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தொடர்ந்து நல்ல வாய்ப்புகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் மடோனா தற்போது அழகிய வெள்ளை கௌன் அணிந்து மணப்பெண் கோலத்தில் அழகாய் ஜொலிக்கும் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு அழகில் அனைவரையும் மயக்கியுள்ளார்.