Connect with us
high court

Cinema News

விமர்சனம் பண்ணுவாங்க!.. அதுக்கெல்லாம் தடைப்போட முடியாது.. ஒரே போடா போட்ட நீதிமன்றம்..!

படம் வெளியாகி மூன்று நாட்களுக்கு விமர்சனங்களை சமூக வலைதளங்களில் வெளியிட தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருக்கின்றது.

கங்குவா விமர்சனம்:

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி வெளியான திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இந்த திரைப்படத்தை கடந்த இரண்டு வருடங்களாக எடுத்து வந்த நிலையில் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்திருந்தார். படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டிருந்த நிலையில் 1000 கோடி வசூல் செய்யும் என்று படக்குழுவினர் நம்பி இருந்தார்கள். ஆனால் படம் வெளியானது முதலே நெகடிவ் விமர்சனங்களை சந்தித்த காரணத்தால் படுதோல்வி அடைந்தது.

இதையும் படிங்க: ஒரு கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகை!.. அப்பவே மாஸ் காட்டிய விஜயசாந்தி!…

தயாரிப்பாளர் சங்கம் வழக்கு:

படம் தோல்வி அடைந்ததற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்களின் நெகட்டிவ் விமர்சனங்கள் தான் காரணம். சில படங்கள் எதிர்மறை விமர்சனங்களால் வியாபார ரீதியாக பாதிக்கப்படுகின்றது என்று கூறி தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ரிட் மனு ஒன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

kanguva

kanguva

அதில் தெரிவித்திருந்ததாவது: ‘ஒரு படம் வெளியாகி 3 நாட்களுக்கு பின்னர் படம் குறித்த விமர்சனங்களை தெரிவிப்பது என்பது ரசிகர்கள் அல்லது மக்களின் கருத்து சுதந்திரத்தை பாதிக்காது. மேலும் படத்தினை விமர்சனம் செய்கின்றேன் என்ற பெயரில் ரசிகர்கள் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் என அனைவரையும் தகாத வார்த்தைகளில் விமர்சிக்கின்றார்கள்.

மேலும், படம் வெளியானதிலிருந்து ரசிகர்கள் படம் குறித்து திட்டமிட்டு நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புவதால் படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் பாதிக்கின்றது. ஒரு நல்ல திரைப்படம் கூட இது போன்ற விமர்சனங்களால் தோல்வி படமாக மாறுகின்றது. எனவே படம் வெளியாகி மூன்று நாட்களுக்கு விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு:

high court

high court

இந்த மனு இன்று நீதிபதி சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியாவதால் படத்தை பார்க்க விரும்பும் மக்களின் மனநிலை மாறுபடுகின்றது. மேலும் படத்தில் நடித்த நடிகர், இயக்குனர்கள் குறித்து அவதூறு பரப்புகின்றன என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க: Vidamuyarchi: காலர் டியூனை செட் பண்ணிக்கோங்க.. வைரலாகும் ‘விடாமுயற்சி’ படத்தின் தீம் மீயுஸிக்

இதையடுத்து பேசிய நீதிபதி தெரிவித்திருந்ததாவது ‘அவதூறு பரப்புவது குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவிக்கலாம். விமர்சனம் கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. சில படங்கள் நல்ல விமர்சனங்களால் வெற்றி பெற்றுள்ளது. அதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க முடியாது’ என்று நீதிபதி தெரிவித்திருந்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி மத்திய மாநில அரசுகள் மற்றும் youtube நிறுவனத்திற்கு உத்தரவிட்டு இந்த வழக்கை நீதிபதி தள்ளி வைத்திருக்கிறார் நீதிபதி.

google news
Continue Reading

More in Cinema News

To Top