
Cinema News
விஜய் படம் பாக்காதீங்க.! காரணம் கூறி பகீர் கிளப்பிய மதுரை ஆதீனம்.!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக தற்போது மாறியிருக்கும் நடிகர் என்றால் அது நிச்சயம் விஜய் தான். அவரது படம் எப்படி இருந்தாலும் பாக்ஸ் ஆபிசில் எந்த குறையும் வைப்பதில்லை.
அந்தளவுக்கு ரசிகர்கள் கூட்டம் வைத்துள்ளார் தளபதி விஜய். இவரது சின்ன சின்ன கருத்துக்களும், பேட்டிகளும் கூட இங்கு தலைப்பு செய்தியாக பார்க்கப்படுகிறது. அப்படி இருக்க இவரை பற்றி ஒருவர் கூறுகையில், அதுவும் கூட பேசுபொருளாக மாறிவிடும்.
அப்படி தான் சமீபத்தில் மதுரை ஆதீனம் விஜய் படம் பற்றி கூறுகையில் அதுவும் பேசுபொருளாகியுள்ளது. அதாவது அவர் கூறுகையில், ‘ இந்துக்களை அவமதிக்கும் வண்ணம் நடிகர் விஜய் தொடர்ந்து பேசி வருகிறார் ஆதலால் விஜய் படங்களை யாரும் பார்க்காதீர்கள் என்பது போலவும்,
இதையும் படியுங்களேன் – அன்றே கணித்தார் ‘ரோலக்ஸ்’ சூர்யா.! பட்டைய போட்டு வெளுத்து வாங்க காத்திருக்கும் கார்த்தி.!
‘கடவுளை இழிவுபடுத்துபவர்களை எதிர்த்து பேசினால் என்னை சங்கி என்று சொல்கின்றனர். ‘ என்பது போலவும் சமீபத்தில் பேசியுள்ளார் மதுரை ஆதீனம். நடிகர் விஜய் பற்றி இவர் கூறிய கருத்துக்கள் தற்போது பேசுபொருளாக மாறிவருகிறது.