மதுரை முத்துவை இதுவரை யாரும் இந்த கோலத்தில் பார்த்திருக்க மாட்டீங்க! வைரலாகும் வீடியோ

by Rohini |
muthu
X

muthu

Madurai Muthu : விஜய் டிவி ரசிகர்களை கவரும் வகையில் பல புதுப்புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டு வருகின்றன. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி. இதுவரை இல்லாத ஒரு புதுமையை விஜய் டிவி அந்த நிகழ்ச்சியில் செய்திருக்கிறது. கடந்த மூன்று சீசன்களாக ஒரே நடுவர்களாக இருந்த வெங்கட் பட் மற்றும் தாமு இவர்களில் இப்போது வெங்கட் பட்டுக்கு பதிலாக மத்தம்பட்டி ரங்கராஜ் நடுவராக இணைந்திருக்கிறார்.

இது முற்றிலும் ஒரு யாரும் எதிர்பாராத வித்தியாசமான முயற்சியாகும். இருந்தாலும் இவர் வந்த பிறகு நிகழ்ச்சியில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அதே விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கின்றது. அதேபோல் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய அது எது இது நிகழ்ச்சியும் இப்போது பல புதுமைகளுடன் மா.கா.பா ஆனந்த் தொகுத்து வழங்கி வருகிறார்.

அதில் குரூப்ல டூப்பு என்ற ஒரு ரவுண்ட் மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்ற ஒரு பிரிவாகும். அதில் மதுரை முத்து கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் மதுரை முத்துவின் ஒரு வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. அவர் இந்த நிகழ்ச்சிக்காக ரிகர்சல் செய்யும் ஒரு வீடியோ தான் அது.

அதில் முற்றிலும் பெண் வேடமிட்டு பரதநாட்டியம் ஆடுவது போல் அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது. அந்த வீடியோ தான் இப்போது வைரல் ஆகி வருகின்றது. மதுரை முத்துவுக்கு என உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். விஜய் டிவி போக மதுரை முத்து பல பட்டிமன்ற நிகழ்ச்சிகளிலும் நடுவராக பணிபுரிந்து வருகிறார்.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/C6wGnWHvXL5/?igsh=MWk1dXpzZDM1d2VnZA==

Next Story