தமிழ் சினிமாவில் முதல் 'ஒரு கோடி’ வசூல் திரைப்படம்!.. வசூல் மன்னனாக கலக்கிய எம்.ஜி.ஆர்...
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் வந்தாலும் சினிமாவையே தனது கட்டுப்பாட்டில் வைத்து ஆண்டவர் என்றால் அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்தான். நாடகங்களில் நடிக்க துவங்கி பின் சினிமாவில் ஹீரோவாக நடிக்க துவங்கி, ஏழை பங்காளனாக திரைப்படங்களில் நடித்து, திரைப்பட இயக்கி, மக்கள் மனதில் இடம் பிடித்து முதலமைச்சராக தமிழகத்தை ஆண்டவர்.
தற்போது பல திரைப்படங்கள் 100 கோடி, 200 கோடி, 500 கோடி என வசூல் செய்தாலும், கருப்பு வெள்ளை காலாத்திலேயே வசூல் சக்ரவர்த்தியாக இருந்தவர் எம்.ஜி.ஆர். இவரின் நடிப்பில் வெளியான பல படங்கள் வசூலில் சக்கை போடு போட்டது. இதில், தமிழ் சினிமா வரலாற்றில் முதல் ஒரு கோடி வசூல் செய்த சாதனையையும் எம்.ஜி.ஆர் தான் செய்தார்.
இவர் நடிப்பில் வெளியான 'மதுரை வீரன்' திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 33 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது. எந்த கருப்பு வெள்ளை திரைப்படமும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. தமிழகம் மட்டுமில்லாமல் பெங்களூர் மற்றும் இலங்கையிலும் கூட தலா ஒரு தியேட்டரில் இப்படம் 100 நாட்கள் ஓடியது. எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடித்த முதல் வெள்ளிவிழா திரைப்படம் இதுதான். அதோடு, தமிழ் சினிமாவில் முதல் ஒரு கோடி வசூல் என்கிற பெருமையையும் இப்படம் பெற்றது.
மதுரை வீரன் திரைப்படம் 1956ம் ஆண்டு வெளியானது. இப்படத்தை யோகானந்த் என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தில் எம்.ஜி.ஆரோடு பத்மினி, என்.எஸ்.கே, பானுமதி. டி.எஸ். பாலையா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இதையும் படிங்க: துணிவு படத்தின் மூலம் நெருக்கமான அஜித்-அமீர்!.. பம்பர் ஆஃபரை கொடுத்து அசத்திய நம்ம தல!..