More
Categories: Cinema History Cinema News latest news

நாத்திகனாக இருந்த சுருளிராஜனை ஆத்திகன் ஆக்கிய வியப்பான சம்பவம்… என்னப்பா சொல்றீங்க?

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் சுருளிராஜன். இவர் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் மட்டுமல்லாது குணச்சித்திர கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். இவரது சுருள்முடியும் வசனம் பேசும் ஸ்டைலும் பலரையும் ரசிக்கவைத்தது. இவரது நகைச்சுவைக்கென்றே தனி ரசிகர் கூட்டமும் உருவானது.

Advertising
Advertising

சுருளிராஜன், எம்.ஜி.ஆர் நடித்த “எங்க வீட்டுப் பிள்ளை” திரைப்படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து ‘இரவும் பகலும்”, “அன்று கண்ட முகம்”, “டெல்லி மாப்பிள்ளை” போன்ற திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவ்வாறு நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்து தனக்கான தனி இடத்தை தக்க வைத்துக்கொண்டவர் சுருளிராஜன்.

சுருளிராஜனுக்கு ஒரு காலகட்டத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தது. ஆனால் அதன் பின் பக்தி பழமாகவே மாறிப்போனாராம் சுருளிராஜன். அவர் ஏன் அப்படி ஆனார்? அவருக்கு அப்படி என்ன அற்புதம் நடந்தது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

சபரிமலை சாஸ்தாவால் நடந்தேறிய அற்புதம்

எம்.ஆர்.ராதாவின் மகனான எம்.ஆர்.ஆர்.வாசுவின் மாமியார், சுருளிராஜனின் வீட்டிற்கு அருகில்தான் வசித்து வந்தாராம். அப்போது ஒரு நாள் அவர், சுருளிராஜனிடம், “நான் சபரிமலைக்கு போகிறேன். சபரிமலையில் உண்டியலில் போடுவதற்கு ஒரு 5 ரூபாய் என்னிடம் கொடுத்து அனுப்பு. அதுக்கப்புறம் உன் வாழ்க்கையில் என்னென்ன மாற்றம் வருதுன்னு மட்டும் பாரு” என கூறினாராம்.

“எவ்வளவோ செல்வு பண்றோம். இந்த அம்மா சொல்றதையாச்சும் கேட்போமே” என்று 5 ரூபாய் கொடுத்து அனுப்பினாராம் சுருளிராஜன். அந்த அம்மையார் கூறியபடியே ஒரு வருடத்தில் சுருளிராஜனின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களும் மாற்றங்களும் நிகழ்ந்ததாம். இதனை தொடர்ந்து ஒவ்வொரு வருடம் 5 ரூபாயை விட அதிகமான ரூபாய்களை காணிக்கையாக வழங்கத் தொடங்கினாராம் சுருளிராஜன். இதனிடையே சுருளிராஜனுக்கு திருமணமும் நடந்திருக்கிறது. ஆனால் அவரது மனைவியின் குழந்தை கருவிலேயே தங்காமல் போய்விட்டதாம்.

அதன்பின் சுருளிராஜன், “எனக்கு மட்டும் குழந்தை பிறந்ததுன்னா நான் உன் சந்நிதானத்திற்கே வருகிறேன்” என ஐயப்பனை வேண்டிக்கொண்டாராம். அவர் அப்படி வேண்டிக்கொண்ட அந்த வருடமே குழந்தை பிறந்திருக்கிறது. இதனை தொடர்ந்து வருடா வருடம் சபரிமலைக்கு செல்லத் தொடங்கினாராம் சுருளிராஜன்.

இதையும் படிங்க: ரஜினியை அந்த விஷயத்தில் ஓவர் டேக் செய்த உலகநாயகன்… எல்லாம் இந்த ஒரு படம்தான் காரணம்!

Published by
Arun Prasad

Recent Posts