விஜய் சொன்னதுமே செஞ்சிருக்கனும்.. பலி ஆடா வந்து மாட்டிக்கிட்ட மகிழ்திருமேனி!
கோலிவுட்டில் இப்பொழுது அதிகம் பேசப்படும் இயக்குனராக இருப்பவர் மகிழ்திருமேனி. அஜித்துடன் இணைந்து பணியாற்றப் போகிறார் என்ற தகவல் வெளியானதிலிருந்தே மகிழ் திருமேனியின் பெயர் அடிக்கடி ஊடகங்களில் அடிபட்டுக் கொண்டே இருக்கின்றது. ஆனால் படம் என்னவோ இன்னும் ஆரம்பமாகாமல் கிணற்றில் போட்ட கல்லாகவே கிடைக்கின்றது.
வசமாக வந்து மாட்டிக்கொண்டாரோ மகிழ்த்திருமேனி? என்று அவரைச் சார்ந்த நண்பர்களும் ரசிகர்களும் புலம்பி வருகின்றனர். படம் எடுக்கவும் முடியாமல் அந்த படத்தில் இருந்து வெளியே வரவும் முடியாமல் இருதலைக்கொல்லி எறும்பாக சிக்கி தவிக்கிறார் மகிழ்திருமேனி.
செல்வராகவன், கௌதம் மேனன் ஆகியவர்களிடம் உதவியாளராக பணிபுரிந்த மகிழ் திருமேனி தடையறத்தாக்க, மீகாமன், தடம் உட்பட படங்களை கொடுத்ததன் மூலம் ஒரு போற்றப்படும் இயக்குனர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். இந்தப் படங்களுக்கு பிறகு அவருக்கு ஒரு பம்பர் ஆஃபரே வந்தது. ஆனால் அதை அவர் சரியாக பயன்படுத்தாததால் கடைசியில் இந்த நிலைமைக்கு வந்து நிற்கிறார்.
உதயநிதியை வைத்து கழகத் தலைவன் என்ற படத்தை இயக்கிய மகிழ் திருமேனி அந்தப் படம் பாதியிலேயே நின்ற சமயத்தில் ஒரு மூன்று கதைகளை விஜயிடம் போய் கூறி இருக்கிறார். அந்த மூன்று கதைகளையும் கேட்ட விஜய் மூன்றுமே பிடித்திருக்கின்றது. உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதையே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நான் நடிக்கிறேன் என்று சொல்லி ஆனால் இடையில் இந்த படம் முடியும் வரை நீங்கள் வேறு எந்த படத்திற்கும் செல்லக்கூடாது என்ற ஒரு கண்டிஷனும் போட்டாராம்.
ஆனால் கொரோனா காலத்தில் பாதியிலேயே விடப்பட்ட கழகத் தலைவன் பட காரணமாக இந்த விஷயத்தை உதயநிதி இடம் போய் கூறி இருக்கிறார் மகிழ்திருமேனி .ஆனால் உதயநிதியோ "இல்லை என் படத்தை முழுவதும் முடித்துக் கொடுத்த பிறகு நீங்கள் விஜய் படத்தை எடுங்கள்" என்று கூறியிருக்கிறார் .இதை அப்படியே விஜயிடம் போய் மகிழ்திருமேனி சொன்னாராம். விஜய்யும் சரி நீங்கள் அதை முடித்த பின்னரே வாருங்கள். நாம் படம் பண்ணலாம் எனக் கூறினாராம்.
ஆனால் அதற்குள் விஜய் வாரிசு படத்தில் கமிட்டாகி அதில் பிசியாக இருந்து விட அடுத்தடுத்து விஜய் லியோ படம் அடுத்ததாக வெங்கட் பிரபு படம் எனப் படு பிசியாக மாறிவிட்டார் .ஆனால் மகிழ்திருமேனியோ அஜித்தை வைத்து எடுக்கும் வாய்ப்பு வந்தாலும் அவரால் இன்னும் அந்தப் படத்தை ஆரம்பிக்கவே முடியவில்லை .அதற்கு தயாரிப்பு நிறுவனம் சார்பாக சில பல பிரச்சனைகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. அதே நேரம் அன்றே விஜயை வைத்து படம் எடுத்திருந்தால் மகிழ்திருமேனியின் மார்க்கெட் எங்கேயோ போயிருக்கும்.
இதையும் படிங்க : லோன்லியா ஃபீல் பண்றீங்களா? அங்க போங்க – மனைவியை பிரிந்து மிஷ்கின் பேசுற பேச்சா?