தமிழ் சினிமாவில் வில்லன் குரூப்பில் இருக்கும் ஒரு சண்டை நடிகராக நடிக்க துவங்கியவர் சத்தியராஜ். பல படங்களில் வெறும் யெஸ் பாஸ் என்கிற வசனம் மட்டுமே பேசி நடித்தவர். மணிவண்ணனின் புண்ணியத்தில் நூறாவது நாள் படத்தில் இவரின் கெட்டப் எல்லோராலும் ரசிக்கப்பட்டது.
அதன்பின் வில்லன் நடிகராக மாறினார். எதையும் புதிதாக முயற்சி செய்து பார்க்கும் இயக்குனர் பாரதிராஜா தான் இயக்கிய கடலோர கவிதைகள் படத்தில் சத்தியராஜை ஹீரோவாக மாற்றினார். ஆனால், அதன்பின் பின்னரும் ஹீரோ வாய்ப்புகள் அதிகம் வரவில்லை. சில படங்கள் மட்டுமே அப்படி வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிங்க: ‘இந்தியன் 2 ’இசை வெளியீட்டு விழாவில் யாரும் எதிர்பாராத ஒரு சிறப்பு விருந்தினர்! யார் தெரியுமா?
எனவே, வில்லன், ஹீரோ என மாறி மாறி நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன் என முடிவெடித்தார். மணிவண்னன் மற்றும் பி.வாசுவின் இயக்கத்தில் இவர் நடித்த படங்கள் எல்லாமே நல்ல வசூலை பெற்றது. மீண்டும் மணிவண்ணன் இயக்கத்தில் அமைதிப்படை படத்தில் வில்லன், ஹீரோ என கலக்கி இருந்தார்.
தற்போது குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் இருந்துகொண்டே தமிழ் சினிமாவையும், நடிகர்களையும் கிண்டலடிக்கும் நடிகர் இவர். இதனால் பல நடிகர்களின் கோபத்திற்கும் ஆளாயிருக்கிறார். மொத்த தமிழ் சினிமாவையும் நக்கலடித்து இவர் நடித்த படம்தான் மகா நடிகன்.
இதையும் படிங்க: பிரபுவுக்கு அவ்ளோ பெரிய மனசா…? அதனால தான் எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்காரா..?
இப்படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘மகா நடிகன் படம் முடிந்து நாங்கள் பார்த்த படம் நன்றாக இல்லை. சத்தியராஜ் அவரின் மனைவியுடன் வந்திருந்தார். இந்த படம் குப்பை. பைசாவுக்கு கூட தேறாது’ என அவரிடம் சொன்னேன். என்ன சார் இப்படி சொல்றீங்க? என கேட்டார். ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க என சொன்னேன்.
அதன்பின் மேலும், சில காட்சிகளை எடுத்து படத்தில் இணைத்தோம். இயக்குனர் ராஜ் கபூர் எடிட் செய்து கொடுத்தார். அதன்பின்னரே படத்தை வெளியிட்டோம். ஓரளவுக்கு வசூலை பெற்றது’ என அவர் சொல்லி இருந்தார்.





