மகாலட்சுமி ப்ளீஸ் என்கிட்ட வந்துடு...நாம சேர்ந்து வாழலாம்!...கதறும் முன்னாள் கணவர்...
சீரியல் நடிகை மகாலட்சுமி கடந்த சில வருடங்களுக்கு முன் அனில் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் சச்சின் என்கிற மகன் இருக்கிறான்.
ஒரு வருடத்திற்கு முன்பு நடிகை மகாலட்சுமி தன்னுடைய கணவர் ஈஸ்வருடன் நெருக்கமாக இருப்பதாக சீரியல் நடிகை ஜெயஸ்ரீ பரபரப்பு புகார் தெரிவித்தார். ஆனால், தன்னுடையை கணவர் அனில் குமார் ஜெயஸ்ரீயுடன் நெருக்கமாக இருப்பதாக மகாலட்சுமி புகார் கூறினார். இதை அனில் மறுத்தார். அதன்பின் அனில்குமாரும், மகாலட்சுமியின் கடந்த ஒரு வருடத்திற்கும் மேல் பிரிந்து வாழ்கின்றனர். அதோடு, நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மகாலட்சுமி விண்ணப்பித்துள்ளார். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, தயாரிப்பாளர் ரவீந்தரை திடீரென மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார். கடந்த சில தினங்களாக சமூகவலைத்தளங்களில் இந்த விவகாரம்தான் விவாதிக்கப்பட்டு வருகிறது. இருவரும் பல ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மகாலட்சுமியின் முன்னாள் கணவர் அனில் குமார், தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு மகாலட்சுமிக்கு கோரிக்கை வைத்துள்ளார். அவர் கூறியதாவது:
கடந்த வருடம் ஜூன் மாதம் வரை நான் மகாலட்சுமியுடன் வாழ்ந்தேன். திடீரென அவர் விவகாரத்து கோரினார். எனக்கு அதில் விருப்பமில்லை. அவர் என்ன காரணத்திற்காக என்னை பிரிய விரும்புகிறார் என்பது இப்போது வரை எனக்கு தெரியவில்லை. இதைத்தான் நீதிமன்றத்தில் கூறி வருகிறேன். நான் பணத்தை பெரிதாக நினைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர் என்னை பிரியும்போது கூட எனக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் சம்பளம் வந்தது. அவர் கூறுவதில் உண்மை இல்லை. எனக்கும் ஜெயஸ்ரீக்கும் இடையே நட்பு மட்டுமே உள்ளது. நான் மீண்டும் மகாலட்சுமியுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு வா.. நான் உன்னை இப்போதும் நேசிக்கிறேன்.. நாம் மீண்டும் மகிழ்ச்சியுடன் வாழ்வோம்’ என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தயாரிப்பாளர் ரவீந்தரை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டு ஹனிமூன் திட்டமிட்டு கொண்டிருக்கும் நிலையில், அவரின் முன்னாள் கணவரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.